Subscribe Us

header ads

15 கோடி ரூபா நிதி மோசடி: பசிலின் மனைவிக்கு வருமா ஆப்பு


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வின் மனைவி புஸ்பா ராஜபக்ஷ்விற்கு நாளை பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கமநெகும திட்டத்தின் 15 கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. குறிப்பாக உள்ளக விமான பயணங்களுக்காக இந்தப் பணம் செலவிடப்பட்டுள்ளது.
இந்தப் பயணங்கள் தொடர்பிலும் பணம் செலவழிக்கப்பட்ட விதம் தொடர்பிலும் புஸ்பா ராஜபக்ஷ்விடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

Post a Comment

0 Comments