மத்திய பிரதேச குவாலியரில் உள்ளது பலாஷ் மகப்பேறு மருத்துவமனை. இங்கு குழந்தை பெற்று கொள்ள வருபவர்கள் தங்களுக்கு குழந்தை வேண்டாம் என்று கூறினால் அந்த குழந்தையை மருத்துவமனை நிர்வாகமே குழந்தை இல்லாதவர்களுக்கு விற்பனை செய்து வந்து உள்ளது.30 படுக்கை கொண்ட இந்த மருத்துவமனையில் ரூ 1400 க்கு குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு விற்பனை செய்த 2 குழந்தைகளை போலீசார் மீட்டு உள்ளனர்.
மேலும் 3 குழந்தைகள் உத்தரபிரதேசம், சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்பனை செய்து உள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனை மேலாளர் அருண் பதோரியாவை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இது குறித்து விசாரணை அதிகாரி கூறும் போது இந்த மருத்துவமனைக்கு தங்கள் கர்ப்பம் வேண்டாம் என வரும் பெண்களிடம் பேசி அவர்களுக்கு ரகசியமாக பிரசவம் பார்த்து உள்ளனர்.குழந்தை பிறந்து தாயார் மருத்துவமனையை விட்டு சென்றது அந்த குழந்தையை மற்ற தமபதிகளுக்கு விற்று வந்து உள்ளனர்.என கூறினார்
0 Comments