கார்ப்பரேட் உலகில் ஒருவரது உடல் மொழியை வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என எடைப் போட்டுவிடுவார்கள். ஏன் நமது வீட்டில் இருக்கும் பாட்டிகளை எடுத்துக் கொள்ளுங்கள், நமது வீட்டிற்கு யாராவது வந்து சென்றால் அவரது உடல் மொழியை வைத்தே அவன் நல்லவனா, கெட்டவனா என கூறுவார்கள்.
நமது நட்பு வட்டாரத்தில் நண்பரிடம் காணப்படும் உடல்மொழி மாற்றத்தை வைத்தே அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என நாம் கண்டறிய முடியும். நமது மனதின் பிரதிபலிப்பு தான் நமது உடல் மொழி.
நாம் தைரியமாக இருக்கும் போது நமது தோள்கள் நிமிர்ந்து இருக்கும். இதுவே, நாம் ஏதாவது தவறு செய்திருந்தால் தோள்கள் தானாக இறங்கி காணப்படும். இது மனிதர்கள் மத்தியில் மிகவும் இயல்பான இன்று..
பிடித்த நபர்
ஒரு நபருடன் பேசும் போது உங்கள் கால்கள் அகண்டு அல்லது கோணலாக இல்லாமல் நேராக இருக்கிறது எனில், அவர் உங்களுக்கு பிடித்த நபராக இருப்பார்கள். உங்களுடன் பேசும் பொது யாரேனும் அப்படி இருந்தால், அவர்களுக்கு உங்களை பிடித்து இருக்கும், அல்லது உங்கள் மீது மரியாதை வைத்திருப்பார்கள்.
வேறுதிசையில்
ஒரு நபருடன் பேசும் போது உங்கள் கால்கள் வேறு திசையில், எதிர் திசையில் திரும்பிக் கொள்கிறது எனில், அவர்கள் மீது உங்களுக்கு கோபம் இருக்கும் அல்லது பிடிக்காத நபராக இருப்பார்கள்.
பொறுமையிழந்து
மிகவும் வேகமாக பேசுவோர் அல்லது கைகளை வேகமாக ஆட்டி, ஆட்டி பேசுவோர், மாறி, மாறி செய்கைகள் செய்துக் கொண்டே இருப்பவர்கள் பொறுமை இல்லாத நபர்களாக இருப்பார்கள்.
ஆர்வமின்றி
தோள்களை தொங்கவிட்டு அமர்ந்திருப்பது நீங்கள் ஆர்வமின்றி இருக்கிறீர்கள் என்று வெளிகாட்டும் உடல் மொழியாகும். மேலும், மன அழுத்தத்துடன் இருக்கும் போது தானாகவே தோள்கள் இறங்கி காணப்படுகிறது.
கருணை
பேசும் போது அடிக்கடி இதயத்தை தொட்டு, தொட்டு பேசும் உடல் மொழி கொண்ட நபர்கள் கருணையுடன் இருப்பவர்கள்.
பொய் கூறுபவர்
பேசும் போது அதிகமாக மூக்கின் அருகே கைகளை கொண்டு போய் பேசும் உடல்மொழி நீங்கள் பொய் கூறுகிறீர்கள் என்று வெளிப்படுத்தும் அறிகுறி ஆகும்.
தடுமாற்றம்
பேசும் போது அடிக்கடி புருவங்களை உயர்த்தி, தலையை ஆட்டிக் கொண்டே பேசுவது, நீங்கள் எதையோ கூற வந்து தடுமாறுகிறீர்கள் அல்லது கூற வரும் செய்தியை சரியாக கூற தயங்குகிறீர்கள் என்று வெளிப்படுத்தும் உடல் மொழியாக இருக்கிறது.
கைக்கட்டி பேசுவது
கைக்கட்டி பேசுவது நமது பண்பில் தவறான அணுகுமுறை என்றுக் கூறப்படுகிறது. ஆனால், மேற்கத்தியம் மரியாதை என்கிறது. உண்மையில் கைக்கட்டி பேசுவது சொல்புத்தி என வெளிப்படுத்தும் உடல் மொழி எனப்படுகிறது.
கைகளை மேசை மீது ஊனி வைப்பது
கைகளை மேசை மீது ஊனி அமர்ந்து இருப்பது நீங்கள் தன்னம்பிக்கை இன்றி / பதட்டத்துடன் இருப்பதை வெளிப்படுத்தும் உடல்மொழி. சிலர்இதை ஸ்டைல் என்றபாணியில் பார்த்தலும், கார்ப்பரேட் உலகம் இதை தவறான உடல்மொழி என கூறுகிறது.
0 Comments