சமூக வலைத்தளங்களில் கண் சிமிட்டும் தனது செல்பிகளுக்கு கிடைக்கும் 'லைக்'குகளும், பார்வைகளும் இளசுகளை செல்பி எனும் புதை குழிக்குள் தொடர்ந்து இழுத்து கொண்டே இருக்கின்றன.ஸ்மார்ட் போன்கள் செல்பி ஆசைக்கு எண்ணை வார்க்கிறது, சமூக வலைத்தளங்கள் அதைப் பற்ற வைக்கின்றன.
செல்பி மோகம் உயிருக்கும் உளைவக்கிறது, ஓடும் ரெயில் முன் செல்பி, கொடூர பாம்புடன் செல்பி , மலை உச்சியில் செல்பி,மரணம் அடைந்தவரின் படுக்கியில் செல்பி என செல்பி மனைதாபிமானமற்று, உயிருக்கு பயம் இல்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது செல்பி மோகத்தால் இன்னுமொரு துயர சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளின் சுற்றுலா விரும்பிகளும் உள்ளூர் மக்களும் ஒரு சேர குவிந்து செல்பி எடுத்துக்கொள்ளும் உலகின் ஆபத்தான செல்பி ஸ்பாட் இதுவாகத்தான் இருக்கும்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் அமைந்துள்ள பெட்ரா டா காவிய (Pedra da Gavea) என்ற மலை முகடு செல்பி பிரியர்கள் அதிகம் பயன்படுத்தும் மிக ஆபத்தான பகுதியென கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்கள் உலகெங்கும் பிரபலமடைந்துள்ள நிலையில் செல்பிபுகைப்படங்கள் அதி விரைவில் வைரலாக மாறுகின்றன. தங்கள் புகைப்படங்களை வைரலாக்கவே பெரும்பாலான செல்பி விரும்பிகள் இது போன்ற ஆபத்தான தளங்களை தெரிவு செய்து புகைப்படங்கள் எடுத்து வெளியிடுகின்றனர்.
குறிப்பிட்ட பெட்ரா 2769 அடி உயரம் கொண்டது. இந்த மலை முகட்டின் உச்சிக்கு சென்று பெரும்பாலான செல்பி பிரியர்கள் புகைப்படம் எடுப்பதாக கூறப்படுகிறது.
வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த மலைமுகடு சென்று ஒரு புகைப்படமேனும் எடுக்க வேண்டும் என தீர்மானம் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான சுற்றுலா விரும்பிகள் இங்கு நாள் தோறும் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பெரும்பாலும் இந்த மலை முகட்டில் புகைப்படம் எடுப்பவர்கள் ஒரேவகையான கோணத்தில் தங்கள் புகைப்படத்தை பதிவிட்டிருப்பது காணலாம். இது போன்ற அச்சுறுத்தும் புகைப்படத்திற்கே அதிக வரவேற்பு இருப்பதாகவும் செல்பி விரும்பிகள் கூறுகின்றனர்.
0 Comments