யாழ்ப்பாணத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குழுக்களை கைது செய்வதற்கு யாழ்ப்பாண காவற்துறையினரின் இரகசிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு நேற்று முதல் தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி டி.வீரசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண காவல் நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், யாழ்ப்பாண நகரில் சட்ட விரோத செயல்களில் ஈடுப்பட்டு வருவோர் குறுகிய காலத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


0 Comments