மின்சார விநியோகத்தடை தொடர்பில், ஆராயும் பொருட்டு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட குழு நேற்று மாலை கூடியது.
அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சாகல ரத்நாயக்க, அஜித் பீ பெரேரா உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் மற்றும் மின்னுற்பத்தி நிலையங்களின் தொழினுட்ப பிரச்சினைகள் பற்றி இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, நாட்டின் அன்றாட செயற்பாடுகளின் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதாக அரசாங்க தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே, இன்றும் நாளையும், நாளொன்றுக்கு ஏழரை மணி நேரம் மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மின்சக்தி மற்றும் மீளுற்பத்தி சக்திவலுத்துறை அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இரண்டு கட்டங்களாக மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
இதன்படி, காலை 7 மணித்தொடக்கம் மதியம் 12.30 மணிவரைக்கும் மற்றும் மாலை 6 மணி தொடக்கம் இரவு 8 மணி வரைக்கும் ஒரு கட்டத்தில் மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படும்.
அத்துடன், மதியம் 12.30 தொடக்கம் மாலை 6 மணிவரையிலும் மற்றும் இரவு 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரைக்குமாக மற்றைய பிரிவில் மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றும் நாளையும் தவிர, எதிர்வரும் நாட்களிலும் மின்சாரம் தடைப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பில் சமூகவலைதளங்களிலும் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதுமட்டுமன்றி மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின் வெட்டு நேர அட்டவணை : பிரதேசவாரியான நேர விபரம்


0 Comments