Subscribe Us

header ads

தாய் மண்ணில் நியூசிலாந்திடம் தஞ்சமடைந்தது இந்தியா!


இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 10 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதனால் பலமான துடுப்பாட்ட வரிசையை கொண்ட இந்திய அணி 127 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் , இந்திய அணியின் வெற்றிக் கனவை நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்கள் தவிடுபொடியாக்கினர்.

முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இன்றி 3 சுழல் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கிய நியூசிலாந்து , இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தது.

துடுப்பாட்டத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட இந்திய அணி 18.1 ஓவரில் 79 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

சொந்த ஆடுகளத்தில் ஓப்பீட்டளவில் சாதாரணமான ஓட்ட இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் தடுமாறிய இந்திய அணியால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

வேகப்பந்து வீச்சுக்கு பெயர் போன நியூசிலாந்து , இந்திய ஆடுகளம் என்பதால் சுழற்பந்து வீச்சாளருக்கு ஏற்றால் போல் இருக்குமென்பதை முன்கூட்டியே ஊகித்தது போல் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி போட்டியின் முன்னரான விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

அவ்வணி சார்பில் சேன்டர் 4 விக்கெட்டுக்களையும் , சொதி 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக அவ்வணி சார்பில் எண்டர்சன் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய அணிசார்பில் தோனி 34 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அவரால் அணியை வெற்றியடையச் செய்ய முடியவில்லை.

நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையை நிலைகுலையச் செய்த சேன்டர் ஆட்டநாயகனாக தெரிவானார்.

Post a Comment

0 Comments