Subscribe Us

header ads

தோனியிடம் நிருபர் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் வழங்கிய அதிரடி பதிலும்!

இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரில் பங்களாதேஷிற்கு எதிரான போட்டியொன்றில் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் பின்னரான செய்தியாளர் சந்திப்பொன்றின் போது செய்தியாளர் கேட்ட கேள்வி தோனிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் .தற்போதும் இதே போன்று ஒரு நிருபர் தோனியிடம் வாயைக் கொடுத்து நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்டுள்ளார்.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி நேற்று மொகாலியில் நடந்தது.

முன்னதாக  இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

பயிற்சியை முடித்து கொண்டு வந்த தோனியிடம் ஒரு நிருபர், "நீங்கள் கிரிக்கெட் விளையாடுவதை விரும்புகிறீர்களா?" என்று கேட்டுள்ளார். அந்த நிருபரின் கேள்வியால் மற்ற நிருபர்கள் சிறிது நேரத்துக்கு வாயை திறக்கவில்லை. அப்போது தோனி, "உங்களால் முடிந்தால் நீங்கள் வந்து கிரிக்கெட் விளையாடுங்கள். நாங்கள் உங்களது வேலையை பார்க்கிறோம்" என்று கூறி அவர் வாயை அடைத்துள்ளார்.

Post a Comment

0 Comments