Subscribe Us

header ads

இந்தியாவின் சூழ்ச்சியிலேயே ஆஸி தோல்வியடைந்தது - டைம்ஸ் பத்திரிகை பரபரப்புத் தகவல்


உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையில் இக்கட்டான மிகவும் பரபரப்பாய் அமைந்த போட்டியில் இந்தியா வெற்றியீட்டியது.
குறித்த போட்டியானது; இந்தியாவின் சந்டிகார்கி, மொஹாலி நகரில் ஐ.எஸ் பிந்த்ரா மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த போட்டியானது ஆரம்பிக்க சில மணித்தியாலங்களுக்கு முன்பதாக இந்தியாவின் பிரபல ஊடகமொன்று புதுமையான கதையொன்றினை வெளியிட்டிருந்தனர்.
அப்போட்டிக்கான “pitch-ஆடுகளம்” ஆனது இந்திய அணிக்கு ஏற்றாற்போல் மாற்றப்பட்டுள்ளது. குறித்த மாற்றமானது இந்திய அணியின் வேண்டுகோளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாகவும் பிரபல இந்துப் பத்திரிகையான டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்ற “பிட்ச் ” இலேயே குறித்த இந்திய – அவுஸ்திரேலியா போட்டியும் இடம்பெறவிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
குறித்த செய்தியில் உண்மைத்தன்மை உள்ளதாலேயே குறித்த செய்தி பெரிதும் பேசப்படுகின்றது. இன்னும், நேற்றைய(27) போட்டியானது முழு உலகமும் பேசுபொருளாக கருதுகின்றது.

Post a Comment

0 Comments