இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் விராட் கோலி தனது அதிரடி ஆட்டத்தினால் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியாவை அரையிறுதிக்கு இட்டுச் சென்றார்.
நேற்று நடைபெற்ற குருப் – 2 இன் கடைசி லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு 161 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதனால் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர் ஆஸி. அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். கவாஜா அதிரடியாக விளையாடி 26 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அதனையடுத்து 44 ஓட்டங்களுடன் பின்ச் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
ஒரு கட்டத்தில் 16 ஓவர்களில் 94 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து கிட்டத்தட்ட தோல்வியடைந்து விடும் என்ற நிலையிலிருந்த இந்திய அணியைஇ விராட் கோஹ்லி தனது நிதா னம் கலந்த அதிரடியால் மீட்டார். இவர் 82 ஓட்டங்களைப் பெற்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றுஇ அணியைஅரையிறுதிக்கு இட்டுச் சென்றார்.
நேற்றைய போட்டியின் நாயகனாக திகழ்ந்த விராட் கோலி மட்டும் இல்லாதிருந்தால் இந்தியா நிச்சயம் தோல்வியைத் தழுவியிருக்கும்.
0 Comments