கடந்த 11.03.2016 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத், புத்தளம் மாவட்ட புழுதிவயல் கிளை சார்பாக மாபெரும் இஸ்லாமிய சமூக விளக்க பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.
அன்று மாலை 6:30 க்கு ஆரம்பமான நிகழ்ச்சிகள் இரவு 10 மணி வரை தொடர்ந்தது.
நிகழ்ச்சிகளை SLTJ புழுதிவயல் கிளையின் செயலாளர் ARM ஜவாஹிர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக SLTJ அழைப்பாளர் மௌலவி சப்வான் (DISc) அவர்கள் “நபிகளாரின் வழிமுறையும் இன்றைய முஸ்லிம்களின் நிலையும்” எனும் தலைப்பில் உண்மையான இஸ்லாமிய வழிகாட்டல்களையும் சமூகத்தில் முஸ்லிம்களால் செய்யப்படும் தவறான செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டினார்.
அதையடுத்து SLTJ அழைப்பாளர் மௌலவி சில்மி (ரஷீதி) அவர்கள் “பெருகிவரும் சமூக தீமைகளும் விடுபடும் வழிகளும்” எனும் தலைப்பில் சீரழியும் எமது சமுதாயத்திற்கான பல அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்கினார்.
இறுதியாக SLTJ அழைப்பாளர் மௌலவி கபீர் (DISc) அவர்கள் “இஸ்லாத்தை வேரறுக்கும் இணை வைப்பு” எனும் தலைப்பில் முஸ்லிம்களால் பரவலாக செய்யப்படும் அடிப்படையை தகர்க்கும் இணைவைப்பான காரியங்களை எச்சரிக்கையாகவும் நகைச்சுவையாகவும் சுட்டிக்காட்டினார். நிகழ்ச்சிகள் இரவு 10 மணி யளவில் SLTJ புழுதிவயல் கிளையின் உப தலைவர் SM இமான் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுற்றது.
தகவல்: MS முஹம்மது






0 Comments