Subscribe Us

header ads

குள்ளநரி கூட்டத்திற்கு சோரம்போகாது கட்சியை பாதுகாக்க முன் வாருங்கள்


கட்­சி­யுடன் முரண்­பட்­டுள்ள அனை­வரும் இதற்கு வெளியே உள்ள குள்­ள­நரி குறு ­நில மன்­னர்­களின் அர­சி­ய­லுக்கு சோரம் போகாமல், இங்கு வந்து நாட­க­மா­டு­வ­தற்கு மேடையில் அம­ராமல் கட்­சியைப் பாது­காப்­ப­தற்கு முன்வர வேண்­டு­மென்று கேட்டுக் கொள்­கின்றேன்.
இவ்­வாறு, நேற்று பால­மு­னையில் நடைபெற்ற மு.காவின் 19ஆவது தேசிய மாநாட் டில் சிறப்­பு­ரை­யாற்­றிய நகர திட்­ட­மிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
எமது மறைந்த தலை­வரின் பாசையில் தேசிய மாநாட்டைச் சொல்­வ­தாக இருந்தால் கட்சி ஆத­ர­வா­ளர்­களின் பெருநாள் என்று சொல்­லலாம். இந்தப் பெரு­நாளை இவ்­வ­ளவு சிறப்­பாகக் கொண்­டா­டு­வ­தற்கு எங்­க­ளுக்கு எல்லா வகை­யிலும் ஒத்­து­ழைப்பு வழங்­கிய பால­முனை மத்­திய குழு­வுக்கும், ஏனைய அயல் கிரா­மத்து கட்­சியின் போரா­ளி­க­ளுக்கும் நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கின்றேன்.
நாங்கள் பல சவால்­களை எதிர் கொண்­டி­ருந்தோம். இந்த மாநாட்டில் கூட அறிக்­கைகள் மூல­மாக சில சவால்­களை எதிர்­கொண்டோம். அத­னை­யிட்டு அலட்டிக் கொள்­ளாமல் மிகவும் அமை­தி­யாக இந்த மாநாட்டை நாங்கள் நடத்­தி­யுள்ளோம். இந்த நாட்­டிற்குப் பின்னர் கட்­சிக்குள் பிள­வுகள் ஏற்­படும் என்று பல எதிர் கூறு­தல்­களைச் சொன்­னாலும், இந்தப் பெரும் மக்கள் சனத் திர­ளுக்கு முன்னால் இந்த இயக்­கத்தின் மரச்­சின்­னத்தை, அதன் உறு­தியை அழிப்­ப­தற்கு யாரும் இடங் கொடுக்க மாட்­டார்கள் என்­பதை நாங்கள் பறை­சாற்ற விரும்­பு­கின்றோம்.
கட்சி பற்­றிய விமர்­ச­னங்­களை கட்­சிக்­குள்­ளேயே செய்­வ­தற்கு வாய்ப்­புக்கள் இருந்தும் பத்­தி­ரி­கை­களின் ஊடாக கட்­சியை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு மிகக் கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். நேற்று கட்­சியைச் சேர்ந்த இரு­வரை கட்­சி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தி­யி­ருக்­கின்றேன். இன்னும் ஒரு சிலரை இடை­நி­றுத்­து­வ­தற்­கான தீர்­மா­னத்தை இன்று நள்­ள­ரவு எடுக்கத் தீர்­மா­னித்­தி­ருக்­கின்றேன். இந்தக் கட்­சியை கட்­டுக்­கோப்­பான இயக்­க­மாக வளர்த்­தாக வேண்டும். இதற்கு நீங்கள் எல்­லோரும் ஒத்­து­ழைக்க வேண்டும்.
இந்த நாட்டின் அர­சியல் தலை­மை­க­ளுக்கு முன்னால் மிகப் பெரிய மாநாட்டை நடத்தி இந்த சமூ­கத்தின் உண்­மை­யான அபி­லா­சை­களை எடுத்­து­ரைப்­ப­தற்கு இருக்­கின்ற அந்த வாய்ப்பை யாரா­வது தடுக்க முனைந்தால் அதனால் அவர்­க­ளுக்கு எந்த நன்­மை­களும் இருக்­க­மாட்­டாது.
எங்­க­ளுக்குள் என்ன முரண்­பா­டுகள் இருந்­தாலும் அதனை கட்­சிக்குள் பேசி தீர்த்துக் கொள்­ளலாம். கட்­சிக்குள் ஜன­நா­யக ரீதி­யாக கதைப்­ப­தற்­கு­ரிய வாய்ப்­புக்­களை தவ­ற­விட்­டு­விட்டு பத்­தி­ரிகை வாயி­லாக அறிக்­கை­யிட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். கூலிக்கு எழு­து­கின்­ற­வர்­களை வைத்துக் கொண்டு இக்­கட்­சி­யையும், தலை­மையும் விமர்­சித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைமை அம்­பாறை மாவட்­டத்­திற்கு வெளியே இருப்­ப­தனால் அம்­பாறை மாவட்­டத்­திற்­கு­ரிய அமைச்சர் பதவி பறி போய் உள்­ள­தென்று கதைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். கட்­சியின் தலைமை எந்த மாவட்­டத்தைச் சேர்ந்­த­வ­ராக இருந்­தாலும் அவரை அலங்­க­ரிக்­கின்ற அர­சியல் கொள்­கை­யைத்தான் எமது மறைந்த தலைவர் காட்­டி­யுள்ளார்.
எனக்கு வழங்­கிய தலைமை என்­பது அம்­பாறை மாவட்ட மக்கள் வழங்­கிய மகு­ட­மாகும். சாய்ந்­த­ம­ருது மண்­ணிலே என்­னு­டைய தலை­யிலே சூடப்­பட்­டுள்ள இந்த மகு­டத்தை இன்னும் நான் தாங்கிக் கொண்­டி­ருக்­கின்றேன் என்றால் அதற்கு இந்த மாவட்டப் போரா­ளி­கள்தான் கார­ண­மாக இருக்­கின்­றார்கள்;. அவர்­க­ளுக்­காக இக்­கட்­சியை தியா­கத்­துடன் முன்­னெ­டுக்கும் போராட்டம் தொடரும் என்று தெரி­வித்துக் கொள்­கின்றேன்.
அதே நேரம், கட்­சி­யுடன் முரண்­பட்­டுள்ள அனை­வரும் இதற்கு வெளியே உள்ள குள்­ள­நரி குறு­நில மன்­னர்­களின் அர­சி­ய­லுக்கு சோரம் போகாமல், இங்கு வந்து நாட­க­மா­டு­வ­தற்கு மேடையில் அம­ராமல் கட்­சியைப் பாது­காப்­ப­தற்கு முன் வர வேண்­டு­மென்று கேட்டுக் கொள்­கின்றேன்.
நாங்கள் நிறைய சவால்­களை எதிர் கொண்­டி­ருக்­கின்றோம். புதிய அர­சியல் யாப்பு, தேர்தல் சீர்­தி­ருத்தம் என்று பல விட­யங்கள் உள்­ளன. இந்த ஆட்­சியின் பங்­கா­ளர்கள் என்ற வகை­யிலும், நாங்கள் உரு­வாக்­கிய ஜனா­தி­பதி, பிர­தமர் என்ற தைரி­யத்­தோடு இவற்­றிக்கு தீர்­வு­களைப் பெற்றுக் கொள்ள வேண்­டி­யுள்­ளது. முன்­பெல்லாம் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற அடிப்­ப­டை­யிலே நாங்கள் இருக்க வேண்­டிய நிர்ப்­பந்­தங்­களை ஆக்­கி­ய­வர்கள் இன்று மேடையில் வந்து வெறும் நாட­க­மா­டு­வ­தற்கு சேட்­டுக்­க­ளையும் அணிந்து கொண்டு மேடையில் அமரும் அசிங்கம் கண்டு மிகவும் வேத­னைப்­ப­டு­கின்றேன். இந்த நாடகம் இன்றோடு முடிவுக்கு வர வேண்டும். இவர்களின் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும்.
இவர்கள் இந்த இயக்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சியை கைவிட்டு பதவி இருந்தால்தான் இந்தக் கட்சியில் நாங்கள் ஒட்டிக் கொண்டிருந்தோம் பதவிகளுக்காகவே வக்காளத்து வாங்கினோம் என்ற கேவலமான நிலைக்குப் போகாமல், தங்களை தவறுகளை உணர்ந்து இதனைப் பலப்படுத்துவதற்கு வந்து சேர்ந்து செயற்படுமாறு கேட்கின்றேன்.
மேற்­படி மு.கா. வின் தேசிய மாநாட்டில் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், ஈ.பி.டி.பி செய­லாளர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா, அமைச்­சர்கள் மனோ­க­ணேசன், திகாம்­பரம், சரத்­பொன்­சேகா, தயா­க­மகே, இரா­ஜாங்க அமைச்சர் ராதா­கி­ருஷ்ணன், பிரதி யமைச்­சர்கள் பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரிஸ், அனோமா கமகே, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எம்.ஐ.மன்சூர், அலி­சாஹிர் மௌலானா, எஸ்.சுமந்­திரன், எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை முத­ல­மைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சபை சுகா­தார அமைச்சர் நசீர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்கள், கட்­சியின் உயர்­பீட உறுப்­பி­னர்கள், ஈரான், ஈராக், பலஸ்தீன், எகிப்து, லிபியா, பாகிஸ்தான், குவைத், கட்டார், ஐக்கிய அரபு இராஜ்யம், ஓமான், பங்களாதேஷ், மலேஷியா நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள், மலேசிய ஆளுங் கட்சியின் பிரதிநிதிகள் உட்பட பலர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments