Subscribe Us

header ads

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகளின் மார்பகங்களை சூடு வைக்கும் வழக்கம் எம்.பி அதிர்ச்சி தகவல்


ஐ.நாவை சேர்ந்த இங்கிலாந்து தேசிய பெண்கள் குழு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் மார்பகங்கள் ஆண்களை கவரும் வகையில் கவர்ச்சியாக வளரக்கூடாது என்பதற்காக, சூடான கற்கள், பெரிய கட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தி மார்பகங்கள் மீது சூடு வைக்கின்றனர்(breast ironing).மேலும், மார்பகங்கள் கடினமான பெல்ட் கொண்டும் கட்டப்படுகிறது, தற்போது இது போன்ற அபத்தமான செயல்களால் உலகளவில் 3.8 மில்லியன் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக, கெமரூன், நைஜீரியா, தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் இதுபோன்ற தவறுகள் அதிகமாக காணப்படுகிறது.இது போன்ற அபத்தமான செயல்களால் உலகளவில் 3.8 மில்லியன் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

பெண்களின் மார்பகங்களை இவ்வாறு செய்வதால், மார்பக புற்று நோய், இரத்த கட்டிகள், தொற்று, நீர்கட்டிகள், மார்பகங்களை இழத்தல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்ற விபரீதத்தை பெற்றோர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.



தற்போது இதே வழக்கம் இங்கிலாந்தை சேர்ந்த தாய்மார்களுக்கும் ஏற்பட்டு உள்ளதாக  கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்.பி ஜேக் பெர்ரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்

ஜேக் பெர்ரி  இந்த செய்தியை கேட்டவுடன் நான் அதிர்ந்து போனேன், இங்கிலந்தில் சுமார் 1,000 பெண்கள் இதுபோன்ற கொடூர பழக்கவழக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை, வாரத்திற்கு இரண்டு முறை மேற்கொண்டால் பெண்களுக்கு இயற்கையான மார்பக வளர்ச்சி இருக்காது. மேலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு வலியால் அவுதியுறும், அவர்கள் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

இந்த ஆபத்தான பழக்கவழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த பழக்கவழக்கத்தை பின்பற்ற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments