Subscribe Us

header ads

ஆப்கானிஸ்தான் அணியுடன் வெற்றியை கொண்டாடிய கிறிஸ் கெய்ல்!



20 ஓவர் உலக கோப்பை தொடரில், நாக்பூரில் நேற்று மாலை நடந்த சூப்பர்–10 சுற்றின் 18–வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் –ஆப்கானிஸ்தான் (குரூப்1) அணிகள் சந்தித்தன.வெஸ்ட் இண்டீஸ் அணியில் ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அறிமுக வீரராக எவின் லிவிஸ் சேர்க்கப்பட்டார்.

முதலில் பேட் செய்து ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில்7 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்தது.அடுத்து 124 ரன் இலக்கை நோக்கி களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் தடுமாறியது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் பந்து வீச்சிலும் சரி, பீல்டிங்கிலும் சரி ஆக்ரோஷமாக செயல்பட்டு, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு ‘தண்ணி’ காட்டினர்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.இந்தப் போட்டி அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

ஆப்கான் அணியின் வெற்றியை அந்த அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

அவர்களின் வெற்றி கொண்டாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லும் இணைந்து கொண்டு அந்த அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

Post a Comment

0 Comments