‘வாட்ஸ்ஆப்’ சேவை பற்றி உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. நாளுக்குநாள் வாட்ஸ்அப் பயனாளர்கள் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள். இன்டர்நெட் இணைப்புக்கான ‘டாப்அப்’ செய்து கொண்டால் மட்டுமே வாட்ஸ்ஆப் சேவையை அனுபவிக்க முடியும். ஆக்டிவேட் செய்த டேட்டா பேக் தீர்ந்து போனால் வாட்ஸ் ஆப் சேவை திரை மறைவாய் நின்று மனதை அரிக்கும். நண்பர்கள், வாட்ஸ்ஆப்பில் என்ன உரையாடிக் கொண்டிருக்கிறார்களோ? என்று ஏங்க வைத்துவிடும்.
அப்படி ஏங்குவதை தவிர்த்து எப்போதும் வாட்ஸ்ஆப் சேவையை பெறுவதற்கென்றே உருவாக்கப்பட்ட சேவைதான் வாட்சிம். இதை உலகம் முழுமைக்குமான பொதுவான சிம்கார்டு என்று கூறலாம். ஆனால் இதன் மூலம் வாட்ஸ்ஆப்பிற்கான சேவையை மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியை சேர்ந்த ஜிரோ மொபைல் என்ற இணைய நிறுவனம் ‘வாட்சிம்’ சேவையை உருவாக்கியது. இதை பயன்படுத்தி இணையம் இல்லாம்ல் வாட்ஸ் ஆப்பில் எப்போதும் தொடர்பில் இருக்கலாம். ‘வாட்ஸ்சிம்’ சேவைக்காக உலகம் முழுவதும் 150 நாடுகளில் இயங்கும் 400–க்கும் மேற்பட்ட ‘டெலிகாம்’ நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது அந்த நிறுவனம்.
வெளிநாட்டிற்கு சென்றாலும் இந்த வாட்ஸ்சிம் எந்த ஒரு ரோமிங் கட்டணத்தையும் வசூல் செய்வதில்லை. தானாகவே சேவை வழங்கும் டெலிகாம் நிறுவனத்தை மாற்றிக் கொண்டு சேவை வழங்கும். எனவே அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த சிம், பயன் உள்ளதாக இருக்கும்.
குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி வாட்சிம் சேவையை பெற்றால், ஓராண்டு முழுவதற்கும் இலவசமாக வாட்ஸ்ஆப் பயன்படுத்தலாம். பிறகு டாப்அப் செய்து கொள்ள வேண்டும். இந்த சிம் எப்போதும் காலாவதி ஆகாது.
வாட்சிம் சேவையில் ஓர் சிறிய குறைபாடு உண்டு. போட்டோ, வீடியோ மற்றும் ஆடியோ போன்றவற்றை இலவசமாக பயன்படுத்த இயலாது. விதிகள், சலுகைகளுக்கு உட்பட்டு இதிலும் இலவசம் பெறும் வசதி இருக்கிறது.
0 Comments