Subscribe Us

header ads

இலங்கையின் நேரத்தை மாற்றுவது குறித்து ஆலோசனை


வரட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக, எதிர்வரும் தினத்தில் ஏற்படக் கூடிய மின்சார பற்றாக்குறையை நிவர்த்திச் செய்யும் வகையில், நடைமுறையில் உள்ள நேரத்தை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புத்தாக்க சக்திவலு அதிகார சபையின் தலைவர் கீர்த்தி விக்ரமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிக வெப்பம் காரணமாக மின்சார நுகர்வு அதிகரித்த காரணத்திற்காகவே இந்த நேர மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.

சாதாரணமாக 2 ஆயிரத்து 200 மெகா வோட்ஸ் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும் தற்போது அது 200 மெகா வோட்ஸால் அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சி காலத்தில் ஏற்பட்ட மின்சார பற்றாக்குறை காரணமாக இவ்வாறு நேர மாற்றம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments