Subscribe Us

header ads

" ஸீரது கைரில் வரா " எனும் நூல் அறிமுகம்



இருளில் இருந்த உலகத்தாரை ஒளியின் பால் இட்டுச் சென்ற எமது உயிரிலும் மேலான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை அன்றைய இஸ்லாமிய அறிஞர்கள் தொடக்கம் இன்று வரையுள்ள அறிஞர்களும் புத்தக வடிவில் எழுதி வருவது யாவரும் அறிந்ததே , அரபு மொழியில் நபியின் வாழ்க்கை வரலாறு நூற்கள் வடிவில் எழுதப்பட்டிருப்பது போன்று ஏனைய மொழிகளிலும் நூலுருப்படுத்தப் பட்டுள்ளன .
நபியின் வம்சாவளி , பெயர் , மனைவிகள் , பிள்ளைகள் , மேற்கொண்ட தஃவா பிரச்சாரங்கள் , அதன் போது அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் , முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் , இறைவன் அவர்களுக்கு வழங்கிய உதவிகள் , நபியவர்களது தன்மைகள் , சிறப்பம்சங்கள் , அவர்கள் மேற்கொண்ட ஜிஹாத் , முஷ்ரிக்களோடும் யூதர்களோடும் கைச்சாத்திட்ட உடன்படிக்கைகள் , அவர்களால் அந்நிய நாட்டு மன்னர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் , எதிர்களின் போர் முறைமைகள் , நபியவர்களது உம்ராக்கள் மற்றும் ஹஜ் வணக்கங்கள் , அடிமையொழிப்பு முறைமை , முஹாஜிர் அன்சாரிய ஸஹாபாக்களுக்கிடையில் ஏற்படுத்திய சகோதரத்துவ உடன்படிக்கை , நபியவர்கள் பயன்படுத்திய பொருட்கள் , உபதேசங்கள் , அவர்களது இறுதி உபதேசம் , அநியாயம் செய்த கோத்திரங்களுக்கு சாபமிடாது அவர்களுக்காக பிரார்த்தனைகள் செய்தமை போன்ற இன்னோரன்ன விடயங்கள் உள்ளடங்கியதே நபியின் வாழ்க்கை வரலாறு ஆகும்.
இதனை அரபியில் " ஸீரதுர் ரஸூல் " எனக் கூறப்படும் . இவ்வடிப்படையில் இலங்கை பெற்றெடுத்த இஸ்லாமிய அறிஞர்களும் அரபியில் நூற்களை தொகுப்பதில் சலைத்தவர்கள் அல்லர் என்பதை ஒரு சிறந்த ஆலிம் நிரூபித்துள்ளார் . 

இலங்கையின் தென்மாகாணத்தில் அமைந்திருக்கும் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ் ஷைக் தீனுல் ஹஸன் பஹ்ஜி அவர்கள் நபியின் வாழ்க்கை வரலாற்றை ஓர் புத்தக வடிவில் தொகுத்து இலங்கையில் இருக்கும் அரபு மத்ரஸாக்களும் ஏனைய அறிஞர்களும் பிரயோசனம் பெறும் பொருட்டு இவ்வாறான பாரிய பங்களிப்பை செய்துள்ளார் எனில் மிகையாகாது . இந் நூல் தற்பொழுது கொழும்பு தெமடகொடையில் இருக்கும் " Children Book Shop " இல் தற்பொழுது விற்பனையாகி வருகின்றது . இப் புத்தகத்தின் விபரம் பின்வருமாறு : 
• நூலின் பெயர் : "ஸீரது கைரில் வரா ( سيرة خير الورى صلى الله عليه وسلم )
அ(z)ஸ்ஹான் ஹனீபா
• நூலாசிரியரின் பெயர் : அஷ் ஷைக் தீனுல் ஹஸன் அல் பஹ்ஜி • அனைத்து தகவல்களும் துல்லியமான முறையில் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களுடன் எழுத்தப்பட்டுள்ளது • நபியின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடர்புடைய புவியியல் வரைபடங்கள் மற்றும் இடங்களின் வர்ணப் புகைப்படங்கள் • நூற்றுக்கு மேற்பட்ட புவியியல் சார்ந்த ஞாபகார்த்த இடங்கள் , சமுதாயங்கள் , கோத்திரங்கள் போன்றவற்றின் தெளிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன • இவ்வனைத்தும் A5 அளவுத் தாளில் 190 பக்கங்களைக் கொண்டதே இப்புத்தகம் • அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது இது தற்பொழுது இலங்கையின் அநேக அரபுக் கலாசாலைகளில் பாடப்புத்தகமாக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அத்தோடு இதனை இலங்கையில் உள்ள ஆலிம்களுக்கும் இது பற்றி அறியாத மத்ரஸாக்களுக்கும் ஜனரஞ்சகப் படுத்தி நாமும் பயனடைந்து ஏனையோரும் பயனடைய வழிவகுப்போம். இவண்
மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் விடுகை வருட மாணவன்

Post a Comment

0 Comments