புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இரஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) 15 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட காத்தான்குடி 1, அல் அக்ஷா ஆழ் கடல் வாவி மீனவ கிராமிய கூட்டுறவு சங்க கட்டிடத்தொகுதி திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு அல் அக்ஷா முன்றலில் நடைபெறவுள்ளது.
அல் அக்ஷா ஆழ் கடல் வாவி மீனவ கிராமிய கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஏ.சி. ஜவ்பர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
அதுதவிர, மட்டு. மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் றுக்ஷான் சீ. கு×ஸ், காத்தான்குடி பிரதேச செயலாளர் முஸம்மில், காத்தான்குடி நகரசபை செயலாளர் சர்வேஸ்வரன் மற்றும் UNDP பிராந்திய ஒருங்கிணைப்பாளர் ராகு ராமமூர்த்தி ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
media unit of State Minister of Rehabilitation and Resettlement
0 Comments