Subscribe Us

header ads

இறுதிப்போட்டி இன்று: தோனியின் படத்தால் பெரும் சர்ச்சை!


ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இன்று மோதுகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் தலைவர் தோனியின் தலையை வெட்டி பங்களாதேஷ் வீரரொருவர் வைத்திருப்பது போல் சர்ச்சைக்குரிய படம் ஒன்று சமூகவலைதளங்களில் பரவிவருகின்றது. இதற்கு முன்னர் இந்திய அணியை ஒரு நாள் தொடரில் பங்களதேஷ் அணி வீழ்த்தியது.

அப்பொழுது இந்திய அணி வீரர்களின் தலையை பங்களாதேஷ் வீரர் ஒருவர் பாதி மொட்டையடித்ததைப் போன்ற படமொன்றை பங்களாதேஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பியிருந்தனர்.

இந்நிலையில் இப்படமும் பல்வேறு கருத்து மோதல்களை உருவாக்கியுள்ளது. ரசிகர்களால் இப்படம் உருவாக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ரவி சாஸ்திரியிடம் இது பற்றி கேட்கப்பட்டபோது அவர் கூறியுள்ளதாவது: 

:செய்தித்தாள்களில் வெளியாகியுள்ள அதுபோன்ற படங்களைப் பார்ப்பது எங்கள் வேலை அல்ல. கிரிக்கெட் விளையாடுவதற்காகவே இங்கு வந்துள்ளோம். நாங்கள் விளையாடும்போது செய்தித்தாள்களில் எழுதப்படும் கட்டுரைகளை கவனத்தில் கொள்ளமாட்டோம் என்று கூறியுள்ளார்.”

Post a Comment

0 Comments