கடந்த வாரம் கத்தாரில் தோஹா அதிவேக நெடுஞ்சாலையில் புலி ஒன்று ஓடிய வீடியோ சமூக வளைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இது குறித்து அந்த நாட்டு காவல்துறை விசாரணைகளை துவங்கியிருந்தது தற்போது அதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இது தொடர்பாக மலயாள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வி கே பிரகாஷ் இயக்கத்தில் ‘Marubhoomiyile Aana’[ பாலைவனத்தில் யானை ] மலயாள திரைப் படத்தின் காட்சிகள் கத்தாரில் இடம்பெறுகிறது.
இது கத்தாரின் உம் ஸாலல் [ Umm Salal ] பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு இடம் பெறுகிறது அந்த பகுதிக்கு செல்லும் வழியில் வாகனத்தில் இருந்த கூண்டின் கதவு தற்செயலாக திறந்திருந்தது இதனால் அந்த புலி தப்பித்து ஓடியதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
எனினும் அதிஷடவாசமாக அந்த புலியின் உரிமையாளர் அந்த வாகனத்தின் பின் தொடர்ந்து வந்தால் எவ்வித பாதிப்புமின்றி அந்த புலியை பாதுகப்பாக மீட்கப்பட்டது.
மேலும் அந்த புலியின் உரிமையாளரை கைது செய்து மிகப்பெரிய அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Mohamed Hasil
0 Comments