Subscribe Us

header ads

இராவணனை தேடிச் சென்ற குழு மீது தாக்குதல்!

கைக்குள் சென்­றி­ருப்­ப­வர்கள் இரா­வணன் வம்­சத்தை சேர்ந்­த­வர்கள் எனவும் அதனால் அவர்­களை இவ்­வாறு குகைக்குள் அழைத்து செல்­வ­தா­கவும் அப்பெண் தெரி­வித்­தி­ருந்தார்.
இவ்­வாறு குகைக்குள் சென்­ற­வர்­களுள் சித்த சுயா­தீ­ன­மற்ற ஒரு­வரும் காணப்­ப­டு­வ­துடன் அவர் இரா­வணன் எல்ல பிர­தே­சத்­துக்கு அரு­கி­லுள்ள கரந்­த­கொல்ல பிர­தே­சத்தை சேர்ந்­த­வ­ரென தெரிய வந்­துள்­ளது.
குறித்த பெண் மொறட்­டுவ பிர­தே­சத்தை சேர்ந்­த­வ­ரெ­னவும் ஏனை­ய­வர்கள் நாட்டின் வெவ்­வேறு பிர­தே­சங்­களை சேர்ந்­த­வர்கள் எனவும் தெரி­ய­வந்­துள்­ளது.
இப்பெண் உள்­ளிட்ட குழு­வினர் நேற்று முன்­தினம் முற்­பகல் 7.30 மணி­ய­ளவில் குகைக்குள் சென்­றுள்­ளனர்.இச்­சந்­தர்ப்­பத்தில் பிர­தே­ச­வா­சிகள் குகைக்கு அருகில் கூடி­யி­ருந்­த­மை­யினால் அவர்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு எல்ல பொலிஸார் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

குகை­யினுள் சென்­றுள்ள பெண் தெரி­விக்­கையில் இரா­வணன் இக் குகைக்குள் இருந்தால் அவ­ருக்கு உரிய சிகிச்­சை­ய­ளித்து விட்டு இன்று (31) வரு­வ­தாக தெரி­வித்தார்.

இதே­வேளை, இக்­கு­கை­யினுள் சுமார் 400 அடி பள்­ள­மொன்று காணப்­ப­டு­வ­தோடு விசா­ல­மான குள­மொன்றும் காணப்­ப­டு­வ­தாக அதற்குள் சென்ற பிர­தே­ச­வா­சிகள் தெரி­வித்­த­தோடு அதனை பார்­வை­யிட வரும் உல்­லாச பய­ணி­க­ளிடம் தாம் பணத்தை பெற்றுக் கொண்டு அவர்­களை குகை­யினுள் அழைத்து செல்­வ­தா­கவும் தெரி­வித்­தனர்.
இக்­கு­ழு­வி­னரின் பயணம் தொடர்பில் பதுளை தொல்­பொ­ரு­ளியல் ஆராச்­சி­யாளர் அலு­வ­ல­கத்­துக்கு அறி­விக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து அவர்கள் இது தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் 6.15 மணியளவில் குகையினுலிருந்து வெளியில் வந்திருந்த மந்திரவாதி பெண் உள்ளிட்ட குழுவினர் மீது சுமார் 500க்கு அதிகமான பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனினும் குறித்த பெண் மாற்றுவழியொன்றினூடாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என என தெரியவந்துள்ளது.












Post a Comment

0 Comments