Subscribe Us

header ads

உள்ளூராட்சி மன்றதேர்தலை உடனடியாக நடத்தக்கோறி தலைகீழாக நின்று ஆர்பாட்டம் (PHOTOS)

நுவரெலியா மாவட்ட அம்பகமுவ பிரதேச சபைக்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்களினால் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசியல் சுயலாபங்களுக்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் காலம் தாழ்த்துவதாகவும் பல தடைவைகள் உடனடியாக, உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு இரண்டு கால்களாலும் நின்று கொண்டு கேட்டோம் அது நடக்கவில்லை. ஆகவே இன்று தலைகீழாக பிரதேச சபையின் முன்னால் நின்று தெரிவிக்கின்றோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர் தெரிவித்தனர்.
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர்களான எலப்பிரிய நந்தராஜ் மற்றும் டக்ளஸ் தர்மகீர்த்தி ஆகியோர்கலந்துகொண்டனர்.




Post a Comment

0 Comments