நபரொருவர் ஒரு கையில் இறந்த மயில் ஒன்றையும் , இன்னொரு கையில் துப்பாக்கியையும் வைத்திருப்பதைப் போன்ற படமொன்று இணையத்தில் வெளியாகியிருந்தது.
இது தொடர்பில் அண்மையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் குறித்த நபரின் மனைவி அது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
கடந்த வருடமே இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
தம்மிடம் இருப்பது அனுமதி பெற்ற துப்பாக்கி என தெரிவிக்கும் அவர் , தாம் புனிதப் பயணம் ஒன்றை மேற்கொண்ட வேளையில் தமது வாகனத்தில் சிக்கி உயிரிழந்த மயிலே அதுவென தெரிவித்துள்ளார்.
தாம் மயிலைக் கொல்லவில்லையெனவும் , ஒரு படத்தை வைத்து முடிவுக்கு வரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி வேனில் மோதி மயில் கீழே விழுந்து கிடக்கின்றமை போன்ற சில படங்களையும் காட்டியுள்ளார்.


0 Comments