Subscribe Us

header ads

இங்கிலீஷ்ல இவ்ளோ இருக்கா? இதெல்லாம் தெரியாம போய்டுச்சே!!

ஆங்கிலத்தை நாம் உலக மொழி என கூறுகிறோம். ஆம், இது உலக மொழி தான். எப்படி தமிழ் இன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடா போன்ற மொழிகள் தனித்து இயங்க முடியாதோ அப்படி தான் ஆங்கிலமும்.



இதர உலக மொழிகளின் பங்களிப்பு இல்லாமல் இது தனித்து இயங்க முடியாது. உலகில் ஒரு பில்லியன் மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். அதாவது ஏழு நபர்களில் ஒருவர் ஆங்கிலம் பேச தெரிந்தவராக இருக்கிறார்.
இதற்கு காரணம் பெரும்பாலான நாடுகளில் ஆங்கிலம் அரசு இயக்க மொழியாக இருந்து வருகிறது. ஏறத்தாழ ஆங்கிலம் ஓட்டுப்போட்ட சட்டை போல தான் எனிலும், இதில் நிறைய சுவாரஸ்யங்களும் இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காண்போம்
*மணப்பெண் அல்லது மணமகளை ஆங்கிலத்தில் Bride என அழைப்பாளர்கள். இது பழங்கால ப்ரோடோ ஜெர்மனிக் வார்த்தை ஆகும். இதன் பொருள் சமைப்பவர் என்பதாகும்.
*ஒவ்வொரு 98 நிமிடத்திற்கும் ஓர் புதிய ஆங்கில வார்த்தை உண்டாகிறது அல்லது கண்டுபிடிக்கப்படுகிறது.
*சுவீடன் நாட்டில் 89% மக்கள் ஆங்கிலம் தான் பேசுகிறார்கள்.
*கியூ "Queue" என்ற வார்த்தையில் நீங்கள் கடைசியில் இருந்து ஒவ்வொரு எழுத்தாக நான்கு முறை நீக்கி கொண்டு வந்தாலும் அது ஒரே மாதிரி தான் உச்சரிக்கப்படும்.
*ஆங்கிலத்தில் உள்ள மொத்த வார்த்தைகளில் "S" என்ற எழுத்திலும் தொடங்கும் வார்த்தைகள் தான் அதிகம்.
*கொங்கு தமிழ், திருநெல்வேலி தமிழ், போல அமெரிக்காவில் 24 ஆங்கில பேச்சு வழக்கு இருக்கின்றன.
*19-ம் நூற்றாண்டு வரை நடிகர் வார்த்தைக்கு Actor என்பதற்கு பதிலாக Hypocrites எனும் வார்த்தை தான் புழக்கத்தில் இருந்தது.
*ஆங்கிலத்தில் இருக்கும் மிகவும் சிறிய வாக்கியம் "Go"
*நாளை என்பதற்கு Tomorrow என்போம், நாளை மறுநாளுக்கு Day after tomorrow என்போம். ஆனால், உண்மையில் Overmorrow என்பது தான் இதற்கான சரியான சொல்.
*ஆங்கிலத்தில் உயிரெழுத்து என கூறப்படும் "Vowels" எழுத்துக்கள் இல்லாமல் வரும் நீண்ட எழுத்து Rhythms (ரிதம்) ஆகும்.

Post a Comment

0 Comments