Subscribe Us

header ads

பாதியில் விடுபட்டுள்ள வீதிகள், மின்சார வேலைகள் யாவும் இம்மாதம் 19 இக்கு முன்னர் முடிவுருத்த பணிப்பு (படங்கள் இணைப்பு)

அபு அலா - 
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் முகமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்களின் உயரதிகாரிகளுடனான கலந்துரையாடல் நேற்று (3) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸிரின் அட்டாளைச்சேனை அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தலைவர்கள், வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள், இலங்கை மின்சார சபையின் உயரதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச சபையின் செயலாளர்கள், பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் பாலமுனை பிரதேசத்தில் விடுபட்டுள்ள வீதிகள், மின்சார வேலைகள், மைதானத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து வேலைகளும் இம்மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுருத்தப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இச்சந்திப்பில் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.





Post a Comment

0 Comments