Subscribe Us

header ads

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் 60வது ஆண்டு நிறைவும் 8 வது மௌலவி பட்டமளிப்பு விழாவும் நாளை (06)

அபு அலா –

அட்டாளைச்சேனை ஷர்க்கியா கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் 60 வது ஆண்டு நிறைவு வைர விழா மற்றும் 8 வது மௌலவி பட்டமளிப்பு விழா நிகழ்வுகள நாளை ஞாயிற்றுக்கிமை (06) அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி கேட்போர் கூடத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. 

கல்லூரி ஆளுநர் சபைத் தலைவர் பேராசிரியர் அச்சி.எம்.இஷாக் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில், கடந்த 2006 முதல் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மௌலவி கற்கை நெறியை பூர்த்தி செய்த 84 விஷேட உலமாக்களும் 2 ஹாபிழ்களுக்கும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டு கல்லூரி தொடர்பான 60 வது ஆண்டு நினைவு மலரும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

மேலும், கல்லூரியின் பழைய மாணவர்கள், பேராசிரியர்கள், கலாநிதிகள், முன்னாள் அதிபர்கள், ஆளுநர் சபை நிருவாகிகளும் இந்நிகழ்வின்போது கௌரவிக்கப்படவுள்ளதாகவும் மேலும் கூறினார்.

Post a Comment

0 Comments