Subscribe Us

S.L.A.S மற்றும் S.L.E.A.S போட்டிப் பரீட்சைகள் தொடர்பாக



அன்பின் ஜமாஅத்தார்களுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு!
S.L.A.S மற்றும் S.L.E.A.S போட்டிப் பரீட்சைகள் தொடர்பாக
இம்முறை இலங்கை நிர்வாக சேவை (S.L.A.S) மற்றும், இலங்கை கல்வி நிர்வாக சேவை (S.L.E.A.S) திறந்த போட்டிப் பரீட்சைகளுக்காக விண்ணப்பித்து இருப்பவர்களுக்கான தொடர் வழிகாட்டல் வகுப்புக்களை PULSED அமைப்பு புத்தளத்தில் ஏற்பாடு செய்துள்ளது. நாடளாவிய ரீதியில் பிரபலமான, தகுதி வாய்ந்த, அனுபவமிக்க விரிவுரையாளர்களினால் இம்மாதம் 27ஆம் திகதி முதல், வார இறுதி நாட்களில் இவ்வகுப்புக்கள் நிகழ்த்தப்பட இருக்கின்றன. மேற்படி பரீட்சைகளை சிறந்த தயார்படுத்தலுடன் எதிர்கொள்ளும் நோக்கில் இவ்வகுப்புக்களில் கலந்து கொள்ள விரும்புவோர், Yes என்று டைப் செய்து 077 238 1286 என்ற இலக்கத்துக்கு SMS ஒன்றை அனுப்புவதன் மூலம் தமது வரவை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
சுங்க உதவி அத்தியட்சகர் (Assistant Superintendent of Customs), சுங்க பரிசோதகர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் சட்டக்கல்லூரி பரீட்சைகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களும், விண்ணப்பிக்க இருப்பவர்களும் மேற்படி வகுப்புக்களில் கலந்து கொள்ள முடியும். மேலதிக தகவல்களுக்கு: • M.F.M. Mujahid - 071 572 6716 • S.M.M. Mafaz - 077 668 6835 ஜெசாகல்லாஹ் ஹைரன்
செயலாளர் - PULSED



Post a Comment

0 Comments