Subscribe Us

சம்மாந்துறை சமூகநல மேன்பாட்டு ஒன்றியத்தினால் ரூபா 1,500,0000.00 மதிப்பீட்டில் உதவிகள்.(படங்கள் இணைப்பு)

தகவல் - இர்சாட் ஏ ஹமீட்.
சம்மாந்துறை சமூகநல மேன்பாட்டு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ரூபா 1,500,0000.00 மதிப்பீட்டில் உதவிகள்.
சம்மாந்துறை சமூகநல மேன்பாட்டு ஒன்றியத்தின் எற்பாட்டில் சுமார் ரூபா 1,500,0000.00 மதிப்பீட்டில் 150 குடும்பங்களின் வீடு திருத்துதல் மலசலகூடங்கள் அமைத்தல் நீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படைத்தேவைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் 'வாழ்வதற்கேற்ற வதிவிடம்' என்ற திட்டத்தை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு 22.02.2016 ம் திகதி தலைவர் ஐ நாசர் தலைமையில் அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது பயனாளிகளுக்கான பத்திரங்கள் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா மற்றும் புனர்வாழ்வு அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் வி. ஹூசையின் அவர்களினாலும் கையளிக்கப்பட்டன.














Post a Comment

0 Comments