Subscribe Us

header ads

யோசிதவின் எடு பிடிகளுக்கு ஆப்பு… (PHOTOS)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸின் புதல்வர் யோசித ராஜபக்ஸவிற்கு ஆதரவாக கைகளில் பாண்ட் அணிந்து ரகர் போட்டியில் விளையாடிய கடற்படை வீரர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.இலங்கை கடற்படையிலிருந்து இவர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
“YOO7” என கைகளில் பாண்ட் அணிந்து, யோசிதவிற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் போட்டியில் விளையாடியதாக நான்கு கடற்படை ரகர் அணி வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த கடற்படை வீரர்கள் கைது பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
டயலோக் கிண்ணப் போட்டித் தொடரில் நேற்றைய போட்டியில் கடற்படை அணி 32-30 என்ற புள்ளி கணக்கில் இலங்கை இராணுவ கழகத்தை தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

yoseta1

Post a Comment

0 Comments