Subscribe Us

header ads

NINA.ED யினால் உறுவான குறுந்திரைப்படங்கள் (ALWA) புத்தளம் அல்ஹனா மாதர் நலன்புரி சங்கத்தில் ஒளிப்பரப்பு. (பெண்கள் மாத்திரம்)


கடந்த 16 வருடங்களாக புத்தளத்தில் மிகவும் சிறப்பான முறையில் இயங்கிவரும் ALWA (AL-HANA LADIES WELFARE ASSOCIATION - அல்ஹனா மாதர் நலன்புரி சங்கம்). புத்தளம் வரலாற்றில் முதன் முறையாக பெண்களுக்கு NINA.ED Film Production யினால் தயாரிக்கப்பட்ட சமூக நோக்கான குறுந்திரைப்படங்களை ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்துள்ளது.

உயிர் மடல்
திருத்தம்
பேச மறந்த வார்த்தை
அம்மாவின் பரீட்சை

ஆகவே, அனைத்து புத்தளம் வாழ் மாதர்களையும்  ALWA அமைப்பினர் இந்நிகழ்ச்சியை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறார்கள்.

தொடர்புகளுக்கு  : 0716638088  |  0775167959

இடம் : 102,Spill Road Puttalam. (வான் குளம் அருகில்)
திகதி : 02/02/2016.
நேரம் : 04.00 p.m - 06.30 p.m
(பெண்கள் மாத்திரம்)


அல்ஹனா மாதர் சங்கத்தை பற்றிய சிறிய அறிமுகம் ;

Vision     : முன் மாதிரியான இஸ்லாமிய பெண்களை உருவாக்குதல்.

Mission : தூய அகீதாவின் அடிப்படையில் அல் குர்ஆனின் வழியில் தனக்கும் தனது சமூகத்துக்கும், நாட்டுக்கும் பயனுள்ள பெண்களை உருவாக்குதல் மற்றும் கல்வி,ஆண்மீகம்,சமூகம் மேம்பாட்டுக்காக உழைக்கும் பெண்களை உருவாக்குதல்.


அல்ஹனா மாதர் சங்கத்தினால் வழங்கப்படும் மேலதிக செயற்பாடுகள் ;

1. பெண்களுக்கான தப்ஸீர் வகுப்புகள்.

2. பெண்களுக்கான தஜ்வீத்  வகுப்புக்கள்.

3. பெண்களுக்கான ஷரியா வகுப்புக்கள்.

4. தரம் 8 மேற்பட்ட பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு ஞாயிரும் காலை 06.30 முதல் 08.30 வரை குர்ஆன் தஜ்வீத் வகுப்புக்கள்.

5. அல்ஹனாவினால் மணல்குன்று பகுதியில் கடந்த 8 வருடங்களாக அல்-குர்ஆன் வகுப்புக்கள் நடாத்தப்படுகிறது.

6. WAMY நிறுவனத்தினால் வழங்கப்படும் பெண்களுக்கான சிறப்பு வகுப்புக்கள்.

7. வாழ்க்கையில் பாதிக்கபட்ட பெண்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குதல்.

இப்படி பல இஸ்லாமிய அடிப்படைகளைக் கொண்டு இயங்கும் தொண்டர் அமைப்பே அல்ஹனா மாதர் நலன்புரி சங்கம் ஆகவே இனியும் தாமதிக்காது மாதர்களாகிய நீங்கள் இந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு தூய அடிப்படையில் இஸ்லாம் வரையறுத்துள்ள விடயங்களையும் சமூகத்தின் மத்தியில் தனக்கும் தனது சமூகத்துக்கும், நாட்டுக்கும் பயனுள்ள பெண்களாக உருவாகுங்கள்.

Post a Comment

0 Comments