புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தையில் அனுமதிபத்திரம் இன்றி நடத்தி சென்ற 13 உணவகங்களுக்கு எதிராக கொழும்பு மாநகர சபை வழக்கு தொடர்ந்துள்ளது.
குறித்த உணவகங்களை பரிசோதனை செய்வதற்காக சென்ற போது, அவை சுகாதாரம் இன்றி நடத்தி செல்லப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பிரதான உணவு பரிசோதகர் எம்.பி.லால்குமார இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு நகரில் , குறிப்பாக புறக்கோட்டை பகுதியில் சுகாதரமின்றி நடத்திச் செல்லப்படும் உணவகங்கள் தொடர்பில் அடிக்கடி எச்சரிக்கை விடுக்கப்படுவதுண்டு.
இவ்வகையான கடைகளில் காலாவதியான பொருட்கள் சமையலுக்காக பயன்படுத்தப்படுகின்றமை பலமுறை செய்திகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி எலிகள் போன்ற உயிரினங்களின் பெருக்கமும் கடைப்பகுதிகளில் அதிகம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை கடைகளில் 'கொத்து ரொட்டி' உணவை வாங்கும் போது அதன் தரம் தொடர்பில் அவதானமாக இருக்கும்படி முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொத்து ரொட்டி தயாரிப்பு செயன்முறையில் 4 பேர் வரை ஈடுபடுவதால் இது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


0 Comments