எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நீர்கொழும்பு இலக்கம் 90 பேஸ்லைன் வீதி, கட்டுவாவில் அமைந்துள்ள குருமடத்தில், பொருளாதாரத்தில் பின்னடைவில் உள்ளவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதுதவிர ஜேர்மன் மருத்துவ நிபுணர்களால் பயிற்றுவிக்கப்பட்ட இலங்கை நிபுணர்கள் டோன் என அழைக்கப்படும், மருத்துவ சேவையை வழங்க உள்ளனர்.
முதுகு, முள்ளந்தண்டு, தோள்பட்டை மற்றும் மூட்டுக்கள் தொடர்பான உபாதைகளைக் கொண்டுள்ளவர்களுக்கு இந்த இலவச சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
முன்னுரிமை அடிப்படையில், இந்த இலவச சேவைகள் மேற்கொள்ளப்படுவதனால், தமது பெயர்களை பதிவு செய்துக்கொள்ளும்படி, ஏற்பாட்டாளர்கள் சார்பாக எஸ்.ஏ.தியாகராஜா வேண்டியுள்ளார்.


0 Comments