விசேடமாக அரசியல் நேர்காணல்களை செய்கின்ற ஊடகவியளாலர்களைப் பொருத்தவரையிலே அவர்களுடைய கேள்விகள் மூலம் தான் அரசியல்வாதிகளினுடைய உண்மைத்தன்மை, திறமை, அவர்களினுடைய செயற்பாடுகள், நிலைப்பாடுகள் போன்ற இன்னோரன்ன விடயங்களைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றன
ஒரு ஊடகவியளான் பக்கச் சார்பாகவோ, ஒரே மனநிலையை கொண்டவராகவோ இருக்கக் கூடாது.
அது மட்டுமன்றி தனக்கு தெரிந்த எல்லா அரசியலையும் வெளிப்படுத்த முற்படுபவராகவும் இருக்கக் கூடாது. கேள்விகளைத் தொடுக்கின்ற பொழுது கூடுதலாக சமகால விடயங்களைக் கையாள்பவராகவும், கலந்துரையாடிய விடயங்களை மீண்டும் மீண்டும் கேட்பதை தவிர்ப்பவராகவும் இருத்தல் வேண்டும்.
கூடுதலான நேரத்தை தான் எடுத்துக்கொள்ளாமல் கேள்விகளை இரத்தினச் சுருக்கமாக கேட்க வேண்டும்!
தான் ஒரு ஊடகவியளாளன் என்ற பெருமாப்புடன் தான் நினைக்கின்ற எல்லா கேள்விகளையும் கேட்டுவிடலாம் என்று நினைக்கக் கூடாது! வரும் அதிதிகளை மதிக்கும் வகையிலே பொருத்தமான யதார்த்தமான உணர்வு பூர்வமான எத்தனை கேள்விகளையும் தொடுக்கலாம்.
தனது மொழி தேர்ச்சியும், மொழி நடையும், கேள்விகளை தொடுக்கும் விதமும் மிகவும் அறிவு பூர்வமானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருத்தல் வேண்டும்!
-Deen Noor Nagoor Kani-
0 Comments