உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இவ்வரு டம் இறுதிவரையில் பிற்போடவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதமளவில் நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போதுள்ள நிலையில், இவ்வருடம் இறுதிவரையில் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பில்லை என தெரிய வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்க ஆட்சியின் போது வரையறுக்கப்பட்ட எல்லை நிர்ணயத்தில் பல குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.
எனவே, எல்லை நிர்ணயம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்து அதனை தீர்ப்பதற்கு இன்னும் கால அவகாசம் தேவையாகவுள்ளது.
ஆகையினாலே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இவ்வருடம் நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மாநகர சபைகள் உட்பட 23 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதம் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பதவிக் காலம் முடிவடைந்துள்ள 312 உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துவது தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தயாராகிவருகின்றன. அத்துடன், பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்ற பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே குறிப்பிட்டபோதிலும் தேர்தலை நடத்தாது பிற்போடப்பட்டு வருவது தொடர்பில் பல்வேறு தரப்புகள் விமர்சனங்களை முன்வைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments