Subscribe Us

header ads

தலதா மாளிகை வளாகத்தில் போராட்டங்கள் நடாத்த அனுமதியில்லை!

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடாத்த இனி எந்தவொரு தரப்பிற்கும் அனுமதியளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலதா மாளிகை புனித பூமியில் போராட்டங்கள், சத்தியாக் கிரக போராட்டங்கள், உபவாசப் போராட்டங்கள் உள்ளிட்ட எந்தவொரு போராட்டத்தையும் நடாத்த இடமளிக்கப்படாது என மத்திய பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

தலதா மாளிகை மற்றும் அண்டைய புனிதப் பகுதி பக்தர்களின் வழிபாட்டுத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புனிதப் பகுதிக்கு உலகின் பல நாடுகளிலிருந்தும் பௌத்த மற்றும் பௌத்தர் அல்லாதவர்கள் வருகை தருகின்றனர். மேலும் சுற்றுலாப் பயணிகளும் தலதா மாளிகைக்கு அதிகளவில் விஜயம் செய்கின்றனர்.

இந்தப் புனித பூமியில் சுதந்திரமாக தங்களது வழிபாட்டு நடவடிக்கைகளையும் சுற்றுலாத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளத் தேவாயன பின்னணி உருவாக்கப்பட வேண்டும்.

கண்டி தலா மாளிகை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடுவதற்கோ அல்லது கூட்டங்களை நடாத்துவதற்கோ இனி இடமில்லை என பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிங்கள வார இறுதி பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments