அம்பலாந்தொட்ட காவல் நிலைய சிறையில் சுருக்கிட்டு கொண்ட நபரொருவர், ஆபத்தான நிலையில் ஹம்பாந்தொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பலாந்தொட்ட காவற்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபர், சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் காரணமாகும்.
குறித்த சந்தேக நபர் நேற்று இரவு தான் அணிந்திருந்த சாரத்தினை பயன்படுத்தி இவ்வாறு சுருக்கிட்டு கொண்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
0 Comments