தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நிதி மோசடி விசாரணைக் காவற்துறை பிரிவு என்பவற்றுக்கு எதிராக தேங்காய் உடைக்கும் மற்றுமொரு போராட்டம் இன்றைய தினம் இடம் பெறவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வானது கொடகவல – அம்மடுவவை - சிறிய கதிர்காமத்தில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் ஒன்றிணைந்த எதிர்கட்சி, தேங்காய் உடைக்கும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments