புதிய உற்பத்தியாளர்களுக்காக சந்தையில் வாய்ப்புகளை விரிவாக்குவதற்கு விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான புதிய உற்பத்தியாளர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கல் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
விருது பெற்றவர்கள் தமது திறமையின் ஊடாக தயாரிக்கும் உற்பத்திகளுக்கு தேவையான சந்தைவாய்ப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பது நெருக்கடியான விடயம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
குறித்த செயற்றிட்டங்களை ஊக்குவிப்பதற்கு அரச கொள்கையின் அடிப்படையில் செயற்படவுள்ளதாக தெரிவித்தார்.
புதிய உற்பத்திகளின் தரங்கள், குணநலன்கள் மற்றும் அவற்றின் கவர்ச்சி என்பன தொடர்பாகவும் கவனம் செலுத்துவது முக்கியமான விடயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.
புதிய கண்டுபிடிப்பாளர்களுக்காக அரச வங்கிகளில் விசேட கடன் திட்டங்கள் மற்றும் அனுசரணைகளை பெற்றுத்தரும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார்.
0 Comments