Subscribe Us

header ads

இலங்கையில் லைலா, சுருக்கு வலைகளுக்கு 21முதல் தடை

இந்திய மீனவர்களின் இழுவைப் படகு மீன்பிடியை இலங்கை ஏற்றுக் கொள்ளாது என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

“லைலா மற்றும் சுருக்கு” மீன்பிடிகளை காட்டிலும் இழுவைப் படகுகள் மூலமான மீன்பிடி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

எனவே இதனை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கைக்கு வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சரிடம் இந்த விடயத்தை வலியுறுத்தவுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தம்மிடம் உறுதியளித்துள்ளதாகவும் அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் சாதகமான பதிலை எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் லைலா மற்றும் சுருக்கு மீன்பிடி வலைகளுக்கு எதிர்வரும் 21ம் திகதியில் இருந்து தடை விதிக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments