ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
நீர்கொழும்பு, கொச்சிக்கடையில் உள்ள ஹோட்டலொன்றில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டமொன்றின்போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 பேர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பத்தேகம சமித தேரர், மெரில் பெரேரா, ஆனந்த ஹரிஸ்சந்திர, லலந்த குணசேகர உள்ளிட்ட பல மாகாண சபை உறுப்பினர்களும், தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, காமினி லொக்குகே, ரோஹித அபேகுணவர்தன, சிசிர ஜயகொடி, பிரசன்ன ரணவீர, ஜோன்ஸ்டன் பர்னாந்து, சனத் நிஷாந்த, மகிந்த யாப்பா அபேவர்தன போன்ற கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும், மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments