Defusing momentum என்றொரு தந்திரம் உண்டு.
வன்முறைகள் வெடிக்க கூடும் அல்லது எதிர் வினைகள் பலமாயிருக்கும் என்று அஞ்சும் சந்தர்ப்பங்களின் கையாளப்படும் ஒரு யுக்தியே இதுவாகும்.
அதற்காக ஆரம்ப கட்ட நகர்வுகள் சிலதை பரீட்சார்த்தம் போல செய்து பார்த்து sense the pulse என்ற signal ஒழுங்காக கிடைக்குமிடத்து operation தொடரும்.
அந்த ராஜ தந்திரங்களைத்தான் அரசு தற்போது கையாள்கிறது!
போரை வெற்றி கொண்ட மாயையில் ஒரு தசாப்த காலம் பெரும்பான்மை மக்களின் முடி சூடா மன்னனாக திகழ்ந்த மஹிந்த ராஜபக்ஷவை over the night இல் சிறையில் அடைப்பதென்பது பாரிய எதிர்வினைகளை உண்டாக்க வல்லதென அரசியல் பரப்பில் ஓர் அச்சமுண்டு.
கிரீஸ் பூதம் தொடங்கி அழுத்கம வரையிலான நிகழ்வுகளே முஸ்லிம்களுக்குள் மஹிந்த விரோதப்போக்கை வளர்த்துவிட்டது. தமிழர்களுக்கு மஹிந்தவின் மீதான வெறுப்புக்கு வேறு பல அரசியல் காரணங்கள் உண்டு.
ஆனால் பெரும்பான்மை சிங்களவர்களுக்கு இன்றும் அவர் ஹீரோவாகவே இருக்கிறார்.
அவரது ஊழல் மோசடிகள், தேசத்தை சுரண்டியமை பற்றியெல்லாம் பெரும்பான்மை சமூகத்தின் பெரும்பான்மையினர் இன்னும் கவலை கொண்டதாக தெரியவில்லை.
ஆகவே இவ்வாறான பின்புலமுள்ள அரசியல் தலைவரை மடக்கிப்பிடிப்பதற்கு , மக்கள் ஏகோபித்து ஏற்றுக்கொள்ளும் ஒரு வலிய காரணத்தினை முன்வைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலும் அரசு உள்ளது!
சாதாரண நீதிமன்ற விசாரணைகளில் உள்ள தாமதம் , குற்றச்சாட்டுகளின் தன்மை, சாட்சிகள், ஆதாரங்கள் என்ற வழமையான விசாரணைகளின் போக்கு என்பனவெல்லாம் மஹிந்தவை மக்கள் எதிர்பார்க்கும் அவசரத்திற்கு கைது செய்து கூண்டில் அடைத்து விட ஒருபோதும் ஒவ்வாதவை!
ஆகவேதான் தேசத்துரோக குற்றச்சாட்டொன்றில் அவரை மடக்கிவிட புதிய உபாயம் ஒன்று வகுக்கப்படுகிறது.
அதுதான் ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கில் வாக்களிப்பை தடுக்க மஹிந்த புலிகளுக்கு பெருந்தொகை பணத்தினை வழங்கினார் என்ற குற்றச்சாட்டை நிறுவுதலாகும்!
இதன் மூலம் முதலாவதாக FCID விசாரணைகளை முன்னெடுத்து துரித கதியில் மஹிந்தவை கைது செய்துவிட இயலும் என அரசு நம்புகிறது.
இரண்டாவதாக, இந்த குற்றச்சாட்டு நிரூபணமாகும் பட்சத்தில் புலிகளை போரில் வென்ற தேசத்தலைவன் என்ற மாயை தகர்க்கப்பட்டு, மஹிந்த ஒரு தேசத்துரோகி என அவரது ஆதரவாளர்களே உணரத்தொடங்கும் ஒரு நிலையினை உருவாக்கிவிட முடியும் என்ற அரசியல் காரணங்களும் உண்டு.
ஆகவேதான் சர்வதேச ரீதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான எமில் காந்தனை சரணடையச்செய்வதற்கான முயற்சிகளில் அரசு இறங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளதை இன்றைய செய்திகள் கூறுகின்றன.
பல்வேறு குற்றச்சாட்டுகளில் தேடப்பட்டு வந்த எமில்காந்தன், வடக்கில் வாக்களிப்பை தடுக்க மஹிந்த புலிகளுக்கு பெருந்தொகை பணத்தினை வழங்கிய போது அதற்கு தரகராக செயற்பட்டாரென்ற பிரதான குற்றச்சாட்டுக்கும் இலக்கானவர்.
எமில் காந்தன் சரண்டையும் போது, அவரது குற்றங்களுக்கான தண்டனைகள் தொடர்பில் ஒரு வகை compromise இற்கு வருவதன் மூலம் அவரை அரசதரப்பு சாட்சியாகவும் மாற்றி ராஜபக்ஷவுக்கான ஆப்பினை செருகி விட தகுந்த சந்தர்ப்பமாய் அமையுமென அரசு காத்திருக்கிறது.
இலங்கை அரசியல் பரப்பில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருக்கும் அதிர்வுகள் பாரிய சுனாமிகளை தோற்றுவித்து விடக்கூடும் என அரசும் பொது மக்களும் ஏலவே அஞ்சிய போதும், அரசின் தந்திரோபாய நகர்வுகள் காரணமாக அமைதியான நீரோட்டத்தில் இலைகள் உதிர்வது போன்றதான சலனங்களையே அண்மைய கைதுகள் ஏற்படுத்தியுள்ளன!
ஆகவே இறுதி இலக்கை நோக்கிய அரசின் பயணம் எதிர்பார்த்த கடினத்தை விட சுலபமாகியுள்ளதைத்தான் இப்போதைய போக்குகள் கோடி காட்டுகின்றன.
நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லவை நடக்கட்டும்.
-முஜீப் இப்ராஹீம்-


1 Comments
மஹிந்தர் அன்டு கம்பெனி தேர்தலுக்கு முன்னரே முஸ்லிம்
ReplyDeleteமத விரோதப போக்கைக் கைக் கொண்டிருந்தனர். அத்துடன் தமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிங்கள பௌத்த கோஷங்களை, தோஷங்களை வளர்த்து வந்தனர்.
அதற்கு மேலதிகமாக சில தேரர்கள் சிலரை ஏவி ஹலால், பர்தா, மற்றும் இல்லாத, பொல்லாத பிரச்சினைகளையும், கிறிஸ்தவர்களுக்கு விரோதமான பிரச்சினைகளையும், சிறப்பாக வில்பத்து போன்ற காணியுடன் சம்பந்தபை்பட்டவைகளையும் ஆயுதமாக்கிக் கொண்டனர். இதனொ் மூலமொ் பௌத்தத்தைக் காக்க வந்த பக்த சீலர்கள் என்ற ஒரு மாயை ஏற்படுத்தி இருந்தனர். இது ஏற்கனவே போரை வென்ற என்ற போதையினால் சாத்தியமாயின!
இச்சந்தர்ப்பத்தில் மஹிந்த சகோரர்களது கொள்ளை, கொலை போன்ற எண்ணிலடங்கா எத்தனை குற்றச் சாட்டுக்களை அவர்கள் மேல் சுமத்தி இருந்தாலும், அவை எடுபடாமலும் அதுவே அவர்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்திவிடும் போக்கே இன்று வரை காணப்பட்டது. அதற்கு உயிரூட்டாக் கொண்டிருந்த மற்றொரு மாயைதானோ், போர்க் குற்றங்கள்.
போரை வென்ற மாவீரனாகவுமொ், நாட்டை மீட்ட காவிய நாயகனாகவும் தன்னை தானே அடையாளப்படுத்திக் கொள்ள எதிரான ஒன்றாக இருந்தவற்றில் பெரும் பங்கை வகித்த தற்போதைய பீல்ட் மார்ஷல் அவரகளைப் பொல்லாத குற்றங்களைச் சுமத்தி சிறையிலடைத்து, அவர்களுக்கு அதனை முதலீடாக்கிக் கொண்டன்ர.
எல்லாம் நல்ல விதமாகத் திட்டமிட்டபடி நடந்தாலும், இறைவனது சூழ்ச்சி அவரது, விரல்களைப் பிடித்தே, அவர்களின் கண்களைக் காயப்படுத்தி விட்டது. அது அரசியல் அதிகாகரத்தை நிரந்தரமாகத் தனது குடும்பச் சொத்தாக்கிக் கொள்ள வேண்டுமென்ற ஆசை! இந்த ஆசையால் உந்தப்பட்டே யாப்பு திருத்தத்தைச் செய்து தான் மூன்றாவது தடவையும் அதிபர் பதவியைத் தக்க வைத்து, அக்கால எல்லையுள், தனது பேரவாவுக்கு எதிரென நம்பப்படுபவைகளை ஒழித்து, தனது நிரந்தர ஆசையை நிறைவேற்றி, தனது வாரிசின் கையில் நாட்டை ஒப்படைத்துச் செல்வதற்கான அடித்ளமாக ஆக்கிக் கொள்ள முயன்றமை!
அவர் தன்னைச் சுற்றி உருவாக்கியிருந்த கவசங்களில் முக்கியமானதாகவிருந்த மக்கள் ஆதரவுக்கு எதிராக அவர் மீது நடவடாக்கை எடுப்பதற்கான எக்காரணமும, மதவிரோதப் போக்கு, பாரிய நிதி மோசடி எதுவும் அவரை முடக்குவதற்குப் போதுமாதாக இருக்கவில்லை. மாறாக, நாட்டில் குருதியை ஓட வைத்து விடும் என்ற பயங்கர சூழலை ஏற்படுத்தி இருந்தது.
அதற்காக அரசும் அவர் ஹீரோவாக ஆக்கிக் கொள்ளக் கூடியவைகளாகவிருந்த போர்க் குற்ற விசாரனையை உள்ளக விசாரனையா ஆச்கிக் கொண்டமை! மற்றும் தற்போது ஆரம்பமாகியுள்ள தந்திரோபாய நடவடிக்கைகள். அதற்குச் சாதகமாக பரிசோதனைக் களமாக அமைந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு, றோஹிதவுக்கு எதிரான குற்றச்சாட்டும், கைதுகளும். மேலும், இவர்களுக்கு ஆரவாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த முன்னோடாயான விமல் கடவுச் சீட்டு விவகாரம்! இதுவும் தேசத்துரோகக் குற்றச் சாட்டுடன் வைத்துப் பார்க்கக் கூடிய குற்றமே! அதேவிட எதிர்பாராமல் பாராளுமன்றுக்குள் பீல்ட் மார்ஷல் என்ற பெயருடன் நடக்கவுள்ள நுழைவுமே! அனைத்தும் சரியாகப் போய்க் கொண்டிருப்பது மஹிந்தரின் குடும்பம் நாடடை மீண்டும் ஒரு தடவை தமது பிடிக்குள் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆழக் குழியில் மீளவிடாது புதைத்து விடும் என எதிர்பார்க்கலாம்!