Subscribe Us

header ads

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதில் இருந்து வந்­த கட்டுப்பாடுகள் நீக்கம்

வெளி­நாட்டு நாண­யங்­களைப் பயன்­ப­டுத்தி கொடுக்கல் வாங்­கலில் ஈடு­ப­டு­வது மற்றும் வெளி­நா­டு­க­ளுக்கு பணத்தை அனுப்­பு­வதில் இருந்த கட்­டுப்­பா­டுகள் முழு­மை­யாக நீக்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை மத்­திய வங்கி தெரி­வித்­துள்­ளது.

அதன் பிர­காரம் NRFC, RFC உள்­ளிட்ட வெளி­நாட்டு நாணயக் கணக்­கு­க­ளி­லுள்ள பணத்தை முன்­கூட்­டிய அனு­மதி இல்­லாமல் அனுப்ப முடியும் என இலங்கை மத்­திய வங்கி இன்று விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இதற்கு முன்னர் இத்­த­கைய கொடுக்கல் வாங்­கல்க­ளின் போது நாணயக் கட்­டுப்பாட்டு தரப்­பி­ன­ரிடம் அனு­மதி பெற வேண்­டி­யி­ருந்­தது. தற்போது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் செய்­யப்­ப­டுள்­ளது.
அதேபோல் வங்கிக் கணக்­கு­களில் இருந்து 10 ஆயிரம் அமெ­ரிக்க டொலர்கள் அல்­லது அதற்கு நிக­ரான தொகையை மீளப்­பெ­று­வ­தற்­கான வாய்ப்பும் வழங்­கப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை, இலங்கை வந்­துள்ள சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் பிர­தி­நி­திகள் இன்று நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை சந்­தித்­தனர்.
உலக பொரு­ளா­தார நிலைக்கு அமைய இலங்கை தொடர்பில் எதிர்­கா­லத்தில் பின்­பற்­றப்­ப­ட­வுள்ள நட­வ­டிக்­கைகள் குறித்து இதன்­போது கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.
இலங்கை சர்­வ­தேச நாணய நிதி­யத்­திடம் கடன் தொகையைப் பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments