Subscribe Us

header ads

தேசிய கீதத்தை தமிழில் பாடியமை அரசியலமைப்புக்கு விரோதமானது

(ப.பன்னீர்செல்வம்)

தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் எனத் தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர்  அட்மிரால் சரத் பி.வீரசேகர  இதன் மூலம் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ள அரசு முயற்சி செய்கின்றது  என்று குறிப்பிட்டார். 
 எனவே இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும் அரசின் முயற்சிக்கு தமிழ் மக்கள் ஏமாறக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரியர் அட்மிரால் சரத்.பி.வீரசேகர மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் அரசியலமைப்பு சிங்கள மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. இதனைத் தழுவி தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பே உள்ளன. இவ்வாறானதொரு நிலையில் நாட்டின் தேசிய கீதம் சிங்களத்தில் நமோ  மாதா என்றே உள்ளது. ஆங்கிலத்திலும் நமோ நமோ மாதா என்றே உள்ளது.
ஆனால் அது தமிழில் நமோ நமோ தாயே என உள்ளது. அதாவது "மாதா" என சிங்களத்திலிருக்கும் பதம் தமிழில் தாயே என மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. 
அரசியலமைப்பின் 23 ஆவது ஷரத்தில் தெளிவாக இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் ஷரத்துக்கள் மொழிபெயர்ப்பின் போது அர்த்தம் பிழையாக இருந்தால் அது அரசியலமைப்பை மீறும் செயலாகும்.

Post a Comment

0 Comments