Subscribe Us

header ads

நடுவர்களின் தீர்ப்பால் பந்தாடப்படும் இந்திய அணியின் சிறப்பான வெற்றி!

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் என்றும் அதிக கவனத்தினை ஈர்ப்பவை.

குறிப்பாக இலங்கையில் இப்போட்டிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.

ஏனெனில் , இந்தியாவில் இருந்து தமது தாய்நாட்டை ஆதரிக்கும் இந்திய ரசிகர்கள் ஒரு புறம் இருக்க இலங்கையில் இந்திய அணிக்கு ஆதரவளிக்கும் பலர் உள்ளனர்.  

இந்திய மற்றும் இலங்கை அணி ரசிகர்களிடையே நடைபெறும் கருத்து மோதல்களை சமூகவலைதளங்களில் அதிகம் காணலாம். போட்டி நடந்து சில தினங்களுக்கு போட்டி தொடர்பான விமர்சனங்கள் , சூடான கருத்துப்பரிமாற்றல்கள் என வாதப் பிரதிவாதங்கள் தொடர்வது வழமை.

மைதானம், ஆடுகளம், வீர்ர்கள் என பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்படும்

அதேபோல் போட்டி தொடர்பான விமர்சனங்களின் போது நடுவர்களின் தீர்ப்பும் சீர்தூக்கிபார்க்கப்படுகின்றது.

நடுவர்களிடம் பக்கச்சார்பின்மை, வழுவாமை போன்ற முக்கிய பண்புகள் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஆனால் சில போட்டிகளில் நடுவர்கள் வழங்கும் தீர்ப்பு போட்டியின் போக்கை திசை திருப்பி விடுவதுடன் , ஒரு அணி பெறும் வெற்றியையும் கேள்விக்குள்ளாக்கி விடும்.

அவ்வாறானதொரு போட்டிக்கு உதாரணமே இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான நேற்றைய இருபதுக்கு 20 இறுதிப் போட்டி.

நேற்றைய போட்டியில் இந்திய அணி மிக இலகுவாக இலங்கை அணியை வீழ்த்தியிருந்தது.  எனினும் இந்திய அணி தனது தாய் மண்ணில் விளையாடும் இப்போட்டிகளில் இந்திய நடுவர்களை நியமித்திருந்தமையும் அவர்கள் வழங்கிய ஆட்டமிழப்புகள் சர்ச்சைக்குரியதாக அமைந்திருந்தமையும் இந்தியாவின் வெற்றியை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இலங்கை அணி ரசிகர்கள் மற்றும் நடுநிலையான கிரிக்கெட் ரசிகர்கள் நடுவர்களின் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எனினும் இலங்கையில் வசிக்கும் இந்திய ரசிகர்கள் மற்றும் இந்தியாவில் தமது தாய்நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்களும் நடுவர்களின் தவறுகள் சாதாரணமாக போட்டிகளில் நடைபெறுவது என வாதிட்டு வருகின்றனர்.

இக் கருத்து மோதல்கள், மீம்ஸ்கள் என சமூகவலைதளங்கள் சூடாகியுள்ளது.

Post a Comment

0 Comments