இன்று உயர் தர பெறுபேறுகள் வெளிவந்து சகல ஊடகங்களிலும் அவை தொடர்பான செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன இந்த நேரத்தில் நாமும் பல்கலைகழகம் தெரிவான மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதேநேரம் , ஏனைய மாணவர்களுக்கு உங்கள் துறைகளில் கல்விமான்களின் ஆலோசனைகளை பெற்று முன்னேற வேண்டும் என்றும் வேண்டுகிறோம்.
இவ்வாறு முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினரும் , அரச வர்த்தக கூட்டுதாபானத்தின் இணைப்பு பணிப்பாளருமான எஸ்.ஏ .எஹியா தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் .
ஒரு வகுப்பில் கற்கும் அனைவரும் பல்கலைக்கழகம் செல்லவோ , கல்வி கலாசாலை செல்லவோ முடியாது , இது சாத்தியமான விடயம் ஒன்றும் இல்லை . இருப்பினும் இவர்களுக்கு தங்களின் உயர்க்கல்வியை தொடர பல வாயில்கள் நமது நாட்டில் திறந்தே உள்ளது . இப்படியான துறைகளில் நமது மாணவ சமூகம் கவனம் செலுத்தல் வேண்டும் .
இன்று பல்கலைகழகம் செல்வோரால் மட்டுமே கற்க முடியும் , முன்னேற முடியும் என்ற நிலை மாறி அனைவருக்கும் கல்வி பெற முடியும் எனும் நிலைக்கு நாம் வந்து விட்டோம் . இதற்கு ஆரம்ப கருவியாக நாம் ஆங்கிலத்தை கற்போம் எனில் அதன் பிற்பாடு நாம் விரும்பும் துறையில் அரச , தனியார் கலாசாலைகளில் உயர்க்கல்வியை தொடரலாம் , எதிர்காலத்தில் இதன் மூலம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல வருமானத்தையும் பெறலாம் .
பாடசாலை கல்வியே கற்காத தாமஸ் அல்வா எடிசனால் இந்த உலகில் மாபெரும் புரட்சியை உண்டு பண்ண முடிந்தது எனில் உங்களால் ஏன் முடியாது ? முயற்சி செய்தால் உங்களாலும் ஒரு துறை சார் நிபுணராய் மாற முடியும் .
அதற்கான இயலுமை , ஆளுமை , திறமை , ஆற்றல், விடாமுயற்சி, போராடும் குணம் என்பவற்றை நீங்களாகவே உங்களுக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும் . இன்றைய மாணவர்கள் இருந்து கொண்டு கணக்கு பார்ப்பவர்களாகவும் , ஒரு சிறு தோல்வி வந்தாலும் சோர்ந்து விடக்கூடியோராகவுமே உள்ளனர் . இந்த நிலை மாறி ஒரு துடிப்புள்ள மாணவனாக நீங்கள் மாறி சாதனை படைத்து நமது பிரதேசம் , மாவட்டம், நாடு என்று உங்கள் சேவையை வழங்க வேண்டும்.
இன்று துரிதமாக அபிவிருத்தி அடையும் , தொழில் சந்தையில் அதிக வேலை வாய்ப்புக்கள் இருக்கும் துறைகளான முகாமைத்துவம் , கணக்கியல் , ஹோட்டல் மனஜ்மென்ட் , விவசாயம், கட்டுமான துறை போன்றவற்றில் உங்கள் கவனங்களை செலுத்துங்கள் என்றும் தெரிவித்தார் .
0 Comments