Subscribe Us

header ads

முஸ்லிம் எய்ட் நிதியுதவில் கிண்ணியா வறிய குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் (படங்கள் இணைப்பு)

மூதூர் மத்திய கல்லூயில் விஞ்ஞான தொழில் நுட்பத் துறையில் முதற்கட்டப் பிரிவினராகக் கல்வி பயின்று 2015ம் ஆண்டு உயர்கல்விப் பரீட்சையில் சிறந்த சித்தி பெற்ற மாணவர்களில் பல்கலைக் கழக மற்றும் பல்கலைக் கழக கல்லூரிக்குத்; தெரிவாகவுள்ள 32 மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்கள் 18 பேருக்கும் சிறப்புப் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கும் வைபவம் மிகவும் கோலாகலமாக 9ம் திகதி இன்று காலை மூதூர் மத்திய கல்லூரி பாடசாலை வளாகத்தில்; நடைபெற்றது. மேற்படி கற்பித்தல் நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ‘முஸ்லிம் எய்ட் சிறிலங்கா’ நிதியுதவியினை வழங்கியிருந்தது.
முஸ்லிம் எய்ட் சிறிலங்கா பணிப்பாளர் பைசர் கான், மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.நிஸாம், வலயக் கல்விப்பணிப்பாளர் செல்வி.அகிலா கனகசூரியம், நலன் விரும்பிகள், பெற்றோர்கள், சமூக, சமயத்தலைவர்கள் மற்றும் முஸ்லிம் எய்ட் ஊழியர்கள் சீஎஸ்ஆர் உறுப்பினர்கள் பங்கேற்ற இந் நிகழ்வினை மூதூர் மத்திய கல்லூரிஆசிரியர்களும் மாணவர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இங்கு சிறப்புரை ஆற்றிய மாகாண கல்விப்பணிப்பாளர் அவர்கள் ’42 மாணவர்கள் உயர்தர பரீட்சையில் தோற்றி, அவர்களில் 32 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கும், பல்கலைக்கழக கல்லூரிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை ஒரு வரலாற்றுச் சாதனையாகும்’ என விதந்துரைத்தார்.
நிரந்தர வீடுகளில் ஒரு தொகுதி கிண்ணியாவில் கையளிப்பு
மேலும், முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிதியுதவியுடன் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் அமையும் காக்காமுனை, பைசல்நகர், குறிஞ்சாக்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மிகவும் வறிய குடும்பங்களுக்காக அமைக்கப்பட்ட 25 வீடுகளில் ஒரு தொகுதி நிரந்தர வீடுகள் பயனாளிகளிடம் இன்று பிற்பகல் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச செயலர், செயலக ஊழியர்கள், முஸ்லிம் எய்ட் பணிப்பாளர், முஸ்லிம் எய்ட் ஊழியர்கள், நலன்விரும்பிகள் மற்றும் சமய, சமூகத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இவை தவிர, முஸ்லிம் எய்ட் சிறிலங்காவின் நிதியுதவியுடன் தோப்பூர் பிரதேசத்தில் 80 நிரந்தவீடுகள் அமைப்பதற்கான முதற் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்துவரும் மூன்றுமாத காலங்களில் மேற்படிகட்டுமாணப் பணிகள் நிறைவுற்று பயனாளிகளிடம் வதிவிடங்கள் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
(அஸீம் முஹம்மத்)




Post a Comment

0 Comments