இத்தாலிய மருத்துவரான சேர்ஜியோ கெனவேரோ, எலியொன்றுக்கு வெற்றிகரமாக தலைமாற்று சத்திரசிகிச்சை செய்துள்ளார்.
இதன் மூலம், மனிதத் தலைமாற்றும் சிகிக்சையும் வெற்றியடையும் என்ற அவரின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
டாக்டர் சேர்ஜியோ கெனவேரோ தலைமையிலான குழுவினர், மேற்படி எலியின் கழுத்தை துண்டித்து அதை மீண்டும் பொருத்தினர்.
இச் சத்திரசிகிச்சை முடிந்து 3 வாரங்களான பின்னர் அந்த எலி காணப்படும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தலைமாற்று சத்திரசிகிச்சை செய்யப்பட்ட எலியுடன் டாக்டர் சேர்ஜியோ கெனவேரோ
சீனாவைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவொன்று ஏற்கெனவே குரங்கொன்றுக்கு இத்தகைய சத்திரசிகிச்சை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், டாக்டர் கெனவேரோ, மனிதர்களுக்கான தலைமாற்று சத்திரசிகிச்சைக்கான ஒரு முன்னோடி சோதனையாக எலிக்கு தலைமாற்று சத்திர சிகிச்சை செய்துள்ளார்.
இன்னும் இரு வருடங்களில் மனித தலைமாற்று சத்திரசிகிச்சை யதார்த்தமாகிவிடும் என டாக்டர் கெனவேரோ கூறுகின்றமை குறிப்பிடத்கத்கது.
பேஸ்புக் நிறுவன ஸ்தாபகரான மார்க் ஸூக்கர்பேர்க் மனிதத் தலைமாற்று சத்திரசிகிச்சைக்கு நிதி வழங்க முன்வந்துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த வெலேரி ஸ்பைரிடொனோவ் முதலாவது தலைமாற்றுச் சத்திரசிகிச்சைக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள தானாக முன்வந்துள்ளார். 31 வயதான ஸ்பைரிடொனோவ், தசை வீணாகும் நோயொன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால், இயற்கையாக மூளை சாவடைந்த ஒருவரின் உடலை தனக்குப் பொருத்தும் சத்திரசிகிச்சைக்கு அவர் முன்வந்துள்ளார்.
டாக்டர் கெனவரோவின் ஆற்றலில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக கணினி விஞ்ஞானியான வெலேரி ஸ்பைரிடொனோவ் கூறுகிறார்.
0 Comments