ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) தாக்குவதற்கு கழுகுகளுக்கு நெதர்லாந்து பொலிஸார் பயிற்சியளிக்கின்றனர்.
ஆளில்லா விமானங்களை வானிலேயே எதிர்கொண்டு கைப்பற்றி, அவற்றை தரைக்கு கொண்டுவருவதற்காக இப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்போது பிடிக்கப்பட்ட வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நெதர்லாந்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தொலைக்கட்டுப்பாட்டுக் கருவியினால் இயக்கப்படும் ஆளில்லா விமானங்கள் கீழே விழுந்து மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் சில இடங்களில் அவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடையை மீறி பறக்கும் ஆளில்லா விமானங்களை தரையிறக்குவதற்கு கழுகுகள் பயன்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
0 Comments