Subscribe Us

header ads

மண மேடையில் ஒரே நாளில் காட்சிப் பொருளாகி விபச்சாரியாகும் அவல நிலை ! (கவிதை)





~ Binth Hassan Az ~

அனைவரினதும் ஆசிர்வாதத்துடன்

அழாகாய் ஓர்
அனாச்சாரம்
அருமை நபி சொன்ன

அம்பலத்தில்
அரங்கேற்றம்!
அந்நிய ஆடவர் முன்

அற்புத முறை மறந்து
அந்நிய கலாச்சாரத்தை

அப்படியே கடனெடுத்து
ஆளவந்த கணவனுக்காய்

அன்பான துணைவனுக்காய் - தன்னை
அங்கமெல்லாம் தங்கம் மின்ன

அலங்கரித்து காத்திராமல்...
அருவருக்கத்தக்க முறையில்
அசைந்து இசைந்து ஓர்

அலங்கோல ஊர்வலம்!
ஆண் பெண் வேறுபாடின்றி

அங்கலாய்த்து உறவாடி
அணுவணுவாய் வெளிக்காட்டி

அவலட்ஷணத்தை உருமாற்றி
அங்க அமைப்புக்களை
கண்ட நிண்டவர் எல்லாம்
அடுத்தவன் கண்களுக்கு ஓர்

ஆபாச விருந்தோம்பல்!
சுற்றியிருக்கும் தோழியரின்

சுயம் இழந்த நடத்தைகள்
சுவாரஸ்யம் தந்தாலும்
முகநூலில் நாளை வலம் வர

சுவனத்துக்கு தடையாகும்!
கையில் போனுடன்
கல்யாண கோலத்தில்
கையடக்கும் முயற்சியில்..

கடைக்கண் பார்வையால் ஓர்
கலாச்சார சீரழிவு!
முகம் மலர புன்னகைத்த மணமக்கள்

கண்டனத்துக்குறியது இச்செயல்!
முகவரிகள் தொலைத்து
பகிரங்க நடைமுறையில்
முகமறியா உறவுகள் சில

முழு உடல் பற்றி விமர்சிக்க..

முறையற்ற வேலையன்றோ!
பாட்டன் பாட்டி வரை

பருவ வயதினர் முதல்
பால் வேறுபாடின்றி
பிறர் துணை கைகுலுக்கி

பசியாறி களைப்பாரும்
பண்பற்ற செயல்களும்
அய்சிங் ஆல் அலங்கரித்த
ஆளுக்கொரு துண்டெடுத்து

ஆளுயர கேக் வெட்டி
அனைவரும் கைதட்டி

அடுத்தவர் முன் ஊட்டி விட
தன் துணை அருகிருக்க

அங்கீகாரம் தந்தால் தான்
அது திருமணமா?
பலர் மனங் களங்கமுறும்!

இங்கிதம் தெரியாமல்
இங்கிலீசை தவழ விட்டு
குதிரையாக நடை பயின்று...

குதியுயர் பாதணியில்
அசைக்கும் அசைவினில்
இரு மனம் இணைத்திடும்

அகிலமே அசைந்திடுமே!
ஆக்கம் : Binth Hassan Az
திருமண வைபவத்தில்..
சில மனம் கலைந்து விடும்
இது தானா எம் மார்க்கம்?
இது தானா நபிவழி?
இல்லாதொழித்திட...

இவ்வித வைபவங்களை
இனி ஓர் உமர் (ரலி) வரமாட்டாரா?

இங்கு ஓர் ஆயிஷா (ரலி) இல்லையா?
இதையுணரும் உள்ளங்கள் உருவாகாதா?

இறைவனின் சாபங்கள்
இறங்க மாட்டாதா?

Post a Comment

0 Comments