Subscribe Us

header ads

பழிவாங்கல் நடவடிக்கை என்னையும் விரைவில் கைது செய்வார்கள்! நாமல்

அரசாங்கம் விரைவில் தம்மையும் கைது செய்யலாம் என்று ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் அதனை தடுக்க தாம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை லுனுகம்வெஹர என்ற இடத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய நாமல், அரசாங்கத்தினால் பொதுமக்களை திருப்திப்படுத்த முடியாமல் போயுள்ளது. எனவே தான் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுத்துள்ளது என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

பழிவாங்கல் நடவடிக்கையாகவே தமது சகோதரர் யோசித்தவும் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments